தென்மேற்கு பருவ காற்று காரணமாக இன்று ஆகஸ்ட் 31ஆம் தேதி தெற்கு மாவட்டங்கள் மற்றும் வட கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
செப்டம்பர் 1ஆம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
புதுவை, காரைக்கால் பகுதிகள் மற்றும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக செப்டம்பர் 2ஆம் தேதி கடலூர், சேலம், புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும்.
செப்டம்பர் 3ஆம் தேதி சில மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
செப்டம்பர் 4ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வரும் 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஓரிரு பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஆக இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மகாபலிபுரம் (செங்கல்பட்டு) 3, காஞ்சிபுரம், வால்பாறை (கோவை), பூண்டி (திருவள்ளூர்), சோலையாறு (கோவை), பொள்ளாச்சி (கோவை) தலா 1 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:
விவசாயிகளுடன் எம்.எல்.ஏ.,க்கள் ஒருநாள்- புதிய திட்டம்!
முந்தைய அதிமுக அரசின் இலவச ஆடு-மாடு திட்டம் தொடரும்- தமிழக அரசு அறிவிப்பு!
Share your comments