பஞ்சாபில் வீட்டுக்கே வந்து ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும், என, முதல்வர் பகவந்த் மான் அறிவித்து உள்ளார். பஞ்சாபில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மி அபார வெற்றி பெற்று, பகவந்த் மான் முதல்வராக பொறுப்பேற்றார். இந்நிலையில், மாநிலத்தில் ரேஷன் பொருட்களை வீடுகளில் நேரடியாக வழங்கும் திட்டம் துவங்கப்படும் என, அவர் அறிவித்துள்ளார்.
வீட்டுக்கே ரேஷன் (Ration at Home)
பஞ்சாப் முதல்வர் மேலும் கூறியதாவது: மாநிலத்தில், வீட்டிற்கே வந்து ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் விரைவில் துவங்கப்பட உள்ளது. இனி, ஏழைகள் வேலைகளை விட்டு ரேஷன் கடைகளில் வரிசையில் காத்திருக்க வேண்டாம்.
பொதுமக்களை 'மொபைல் போனில்' தொடர்பு கொண்டு, அவர்கள் இருக்கும் நேரத்தில் ரேஷன் பொருட்கள் கொண்டு வந்து சேர்க்கப்படும். ரேஷன் கடைகளுக்கு மிக அருகில் வசிப்போர், கடைகளுக்கு சென்று பொருட்களைப் பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.
திட்டம் குறித்து ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், ''பஞ்சாபில் வீடு தோறும் ரேஷன் திட்டம் நிறைவேற்றப்படுகிறது. இதன்பின், அனைத்து மாநிலங்களிலும் இதே நடைமுறையை பின்பற்ற வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுப்பர், என்றார்.
மேலும் படிக்க
பாரத் பந்த்: பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க மத்திய அரசு அறிவுரை!
தேசிய பென்சன் திட்டம்: புதிய மாற்றங்கள் ஏற்படுத்த பரிந்துரை!
Share your comments