கடந்த 5 மாதங்களில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 65,003 பேர், சேலம் மாவட்டத்தில் 59,495 பேர் ரேசன் கார்டு கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.
தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதியில் ரேசன் கார்டு இல்லாதவர்களுக்கு புதிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய ரேசன் கார்டு கிடைக்க ஏற்பாடு செய்துள்ளார். அதன் அடிப்படையில் ரேசன் கார்டு இல்லாதவர்களுக்கு ரேசன் கார்டு வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த மே மாதம் முதல் இந்த மாதம் 26-ந்தேதி வரை தமிழகம் முழுவதும் 10 லட்சத்து 54 ஆயிரத்து 327 பேர் புதிய ரேசன் ஸ்மார்ட் கார்டு வேண்டி விண்ணப்பித்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
அதில், 7 லட்சத்து 28 ஆயிரத்து 703 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. 2 லட்சத்து 61 ஆயிரத்து 844 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
மேலும், 6 லட்சத்து 65 ஆயிரத்து 102 விண்ணப்பங்களுக்கு புதிய ஸ்மார்ட் கார்டு வஸ்கங்கப்பட்டுள்ளது என்றும், 63 ஆயிரத்து 601 ஸ்மார்ட் கார்டு அச்சிடும் பணி நடைபெற்று வருவதாகவும், 63 ஆயிரத்து 780 விண்ணப்பங்கள் வைப்பில் உள்ளதாகவும், உணவு வழங்கல் துறை சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தை பொருத்தவரை அதிகபட்சமாக, தென்சென்னையில் 67 ஆயிரத்து 051 நபர்கள் விண்ணப்பித்ததில், 36 ஆயிரத்து 815 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 12 ஆயிரத்து 754 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மேலும் 27 ஆயிரத்து 829 நபர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ள தோடு, 8,986 நபர்களுக்கு ஸ்மார்ட் கார்டு அச்சிடும் பணி நடைபெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் வடசென்னையில் 55962 நபர்கள் விண்ணப்பித்ததில், 28624 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 10 741 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
அதில், 24234 பேருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளதாகவும், 4,390 பேருக்கு அச்சிடும் பணி நடைபெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 மாதங்களில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 65 ஆயிரத்து 3 பேர், சேலம் மாவட்டத்தில் 59495 பேர் ரேசன் கார்டுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க:
Share your comments