குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் எண் விவரங்களை எந்த காரணத்தைக் கொண்டும் கேட்கவோ, ஆதார் அட்டையின் நகலை பெறவோ கூடாது என மாவட்ட ஆட்சியர்களுக்கு உணவுத்துறை சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.
அதோடு, ரேஷன் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கில் ஆதார் எண் இணைத்திருந்தாலே போதும் என்றும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
ரேஷன் அட்டைதாரர்களில், 14 லட்சத்து 86 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வங்கிக் கணக்கு இல்லை எனவும், புதிய வங்கிக் கணக்கு தொடங்கி, ஆதார் எண் தொடர்புடைய தகவல்களை அனுப்புமாறும் கூட்டுறவுத்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. மேலும் ரேஷன் அட்டைதாரர்களில் வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் புதிய வங்கிக் கணக்கை தொடங்க தேவையான அறிவுறுத்தல்களை வழங்குமாறும் தமிழ்நாடு கூட்டுறவுத்துறை சார்பில் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் உணவுத்துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ள புதிய சுற்றறிக்கையில், வங்கிக் கணக்கு இல்லாத நபர்கள் புதிய வங்கி கணக்கு தொடங்க அருகில் உள்ள கூட்டுறவு வங்கியின் விண்ணப்பத்தை நியாய விலைக் கடையில் பெற்றுக் கொள்ள அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அதே சமயத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஏற்கனவே வங்கிக் கணக்கு உள்ளது என்றால், அந்த வங்கிக்கு சென்று அவர்களது ஆதார் எண்ணை இணைக்க அறிவுறுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. வங்கிக் கணக்கு இல்லையென்றால், அருகில் உள்ள கூட்டுறவு வங்கி அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் புதிய கணக்கு தொடங்கி அதை ஆதார் எண்ணுடன் இணைத்து, அந்த விவரங்களை அவரவர் ரேஷன் கடைகளில் தெரிவிக்க அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கூடுதலாக ரேஷன் அட்டைதாரர்களின் ஆதார் எண் விவரங்களை எந்த காரணம் கொண்டு கேட்கவோ, ஆதார் நகலை பெறவோ கூடாது என சார் நிலை அலுவலர்களை அறிவுறுத்துமாறு மாவட்ட ஆட்சியருக்கு கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
ரூ.8000 கோடியைத் தாண்டிய கூட்டுறவு வங்கி பயிர் கடன்!
Pongal Scheme: பொங்கலுக்கு ரொக்கப் பணம் ரூ.1000! அப்ளை பண்ணிடுங்க!!
Share your comments