1. செய்திகள்

கொரோனாக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றாவிட்டால் தளர்வுகள் வாபஸ்: மத்திய அரசு எச்சரிக்கை!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Relaxation withdrawal if corona restrictions are not followed: Federal warning

மலைப் பிரதேசங்களில் கொரோனாக் கட்டுப்பாடுகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்றால், , தளர்வுகள் திரும்பப் பெறப்படும் என்றும் மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

அச்சுறுத்தும் கொரோனா (The threatening corona)

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து மாநில அரசுகளும் அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

தற்காப்பு நடவடிக்கை (Defensive action)

இதன் ஒருபகுதியாக கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலில் இருந்து மக்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ள ஏதுவாக தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன.

தாக்கம் குறைகிறது (The impact is diminishing)

இதன் காரணமாக, இந்தியாவில் கொரோனா 2வது அலையின் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. கடந்த 111 நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்புகள் 34 ஆயிரத்தை அடைந்தது.

மருத்துவர்கள் எச்சரிக்கை (Doctors warn)

பாதிப்புகள் குறைந்து வருவதால், பல இடங்களில் மக்கள் கொரோனாக் கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் இருப்பதுத் தெரியவந்துள்ளது. இது கொரோனா 3வது அலைக்கு வழிவகுக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஊரடங்கு தளர்வுகளால் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறியதாவது:

சிகிச்சை பெறுவோர் (Recipients of treatment)

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவோரின் எண்ணிக்கை 5 லட்சத்திற்கும் குறைவாக உள்ளது.

பாதிப்பு (Vulnerability)

மஹாராஷ்டிரா, தமிழகம், ஒடிசா, ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் மட்டுமே 10 சதவீதத்திற்கும் அதிகமான பாதிப்பு சதவிகிதம் பதிவாகி வருகிறது.

2ம் அலை குறையவில்லை (The 2nd wave did not subside)

இன்னும் சில பகுதிகளில் இரண்டாம் அலை குறையவில்லை. மலைப் பிரதேசங்களுக்கு செல்லும் மக்கள் கொரோனாக் கட்டுப்பாடு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றுவதில்லை.

எனவே கட்டுப்பாடுகளை பின்பற்றவில்லையெனில் தளர்வுகள் திரும்பப் பெற்றுவிட்டு, தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மீண்டும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க...

18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசக் கொரோனாத் தடுப்பூசி - தமிழக அரசு!

கொரோனா தடுப்பூசி விநியோகிக்க டிரோன் பயன்பாடு! ஆய்வு செய்ய அரசு அனுமதி!

தமிழகத்திற்கு 4 இலட்சம் கொரோனா தடுப்பூசி வருகை! சுகாதாரத் துறைத் தகவல்!

English Summary: Relaxation withdrawal if corona restrictions are not followed: Federal warning

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.