வடக்கு பசிபிக் பெருங்கடலில் இருந்து 200,000 கிலோகிராம் பிளாஸ்டிக் குப்பைகளை The Ocean Cleanup Mission மூலம் அகற்றப்பட்டுள்ளது. இதுவரை கடலிலிருந்து அகற்றப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளில் இது புதிய மைல்கல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது மக்கள் தங்களது அன்றாட வாழ்வில் பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறியும் பிளாஸ்டிக்கில் பெரும்பகுதி நீர் நிலைகள் வழியாக கடலில்தான் போய்ச் சேர்கிறது.அப்படி சேரும் பிளாஸ்டிக் கழிவுகள் கடல்வாழ் உயிரினங்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றன. கடல் வாழ் உயிரினங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன் கடல் வளத்தை பாதுகாத்து, வருங்காலம் வளமாக இருக்க அரசு முதல் தனி மனிதன் வரை அனைவரும் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து வரும் சூழ்நிலையில், The Ocean Cleanup கடலில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
இலாப நோக்கற்ற அமைப்பானது வடக்கு பசிபிக் பெருங்கடலில் இருந்து 200,000 கிலோகிராம் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றியுள்ளது. இது கிரேட் பசிபிக் குப்பை இணைப்பு (GPGP) என்று அழைக்கப்படுகிறது , இப்பணியானது கலிபோர்னியா மற்றும் ஹவாய் இடையே நடைப்பெற்றுள்ளது. இந்த சாதனையானது 2023 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் தூய்மை பணியின் (ட்ரிப் 13) நிகழ்வின் போது நிகழ்த்தப்பட்டுள்ளது.
பெரிய மீன்பிடி வலைகள் முதல் சிறிய மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் வரை அனைத்தையும் உள்ளடக்கிய மிதக்கும் பிளாஸ்டிக்குகளின் பெரிய குவியலில் இருந்து 6,260 கிலோகிராம் கழிவுகளை பிரித்தெடுக்க முடிந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு ஆய்வின்படி, 75 சதவீத குப்பைத் தொட்டியில் மீன்பிடி தொடர்பான பிளாஸ்டிக் கழிவுகளை அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிஸ்டம் 002 எனப்படும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட துப்புரவு கருவிகள் மற்றும் பிற உபகரணங்களால் கடலில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணி நடைப்பெற்றது. பிளாஸ்டிக் கழிவுகளைத் தேடி கடலின் மேற்பரப்பை தொடர்ந்து ஸ்கேன் செய்யும் AI-வகை கேமராக்களும் இந்த பணியின் போது உபயோகப்படுத்தப்பட்டுள்ளன.
சமீபத்தில் எட்டப்பட்ட இந்த மைல்கல் கடலில் ஒரு துளி மட்டுமே. 2040-க்குள், கடலில் மிதக்கும் பிளாஸ்டிக்கில் 90 சதவீதத்தை சுத்தம் செய்துவிடலாம் என்று நிறுவனம் நம்புகிறது.உலக அளவில் கடல்களில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்துள்ளது குறித்து சர்வதேச விஞ்ஞானிகள் குழு ஆய்வு மேற்கொண்டது. அட்லான்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
1990 வரை கடலில் கலந்த பிளாஸ்டிக் கழிவுகளை துல்லியமாக கணிக்க முடிந்த நிலையில் அதன் பின் 2005 வரை கழிவுகள் குவிவதில் நிலையான தன்மை இல்லை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலை தொடரும் பட்சத்தில் தற்போது இருப்பதை விட 2040-க்குள் இது 3 மடங்கு வரை பிளாஸ்டிக் கழிவுகள் உயரும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் காண்க:
மாட்டு கோமியம் முதல் மனித சிறுநீர் வரை ஆய்வு- அதிர்ச்சி அளித்த IVRI ரிப்போர்ட்
Share your comments