புதுப்பிக்கப்பட்ட தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் தாவரவியல் பூங்கா பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு ரூ.50, சிறுவர்களுக்கு ரூ.30 நுழைவுக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கோவை தாவரவியில் பூங்கா
கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தாவரவியல் பூங்காவானது, தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள முக்கியமான பூங்காக்களுக்குள் ஒன்றாகும். 1908-ல் நிறுவப்பட்டு 113 வருடங்கள் பழமையான இந்த பூங்காவனது, உதகை தாவரவியல் பூங்காவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய பூங்கா ஆகும். பூங்கா விரும்பிகள், இயற்கை ஆர்வலர்கள், தாவரவியல் வல்லுநர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு ஒரு கருவூலமாய் விளங்குவதோடு மட்டுமல்லாமல் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் மற்றும் அறிஞர்களுக்கு மலரியல் மற்றும் நில எழிலூட்டுதல் சார்ந்த கருத்துகளை பயிற்றுவிக்கவும் முக்கியமான ஒரு மையமாக இந்த பூங்கா விளங்குகிறது. 47.7 ஏக்கர் பரப்பளவில் அமைதியான சுற்றுச்சூழலில் அமைந்துள்ள இப்பூங்கா பல்வேறு பூர்வீக மற்றும் அன்னிய தாவர வளங்களுக்கு புகலிடமாக உள்ளது.
பூங்காவின் தாவர வளங்கள்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தாவரவியல் பூங்காவினை, 70 இயற்கைப் பெருங்குடும்பங்களைச் சேர்ந்து ஏறத்தாழ 800 சிற்றினங்களும் பலரகமான செடிகளும் அலங்காரிக்கின்றன. இத்தாவரவியல் பூங்காவினுள் அமைந்துள்ள மூலிகைத்தோட்டம் மற்றும் மருந்து பயிர்கள் பிரிவில் மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த செடிகளும் நறுமணச் செடிகளும் பராமரிக்கப்படுகின்றன.
சமீபத்தில் சீரமைக்கப்பட்ட தாவர பராமரிப்புக் குடிலில் கிட்டத்தட்ட 400 சிற்றினங்களைச் சார்ந்த தனித்துவமான அலங்காரச் செடிவகைகள் பேணிக்காக்கப்பட்டு வருகின்றன. பல வருடகளாக இப்பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் பல்வகையான தாவர வளங்களை மேம்படுத்தும் வகையில் புதிய தாவர வகைகள் பலவும் சமீப காலத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
பூங்காவில் மேற்கொள்ளப்பட்டுள்ள மறுசீரமைப்பு பணிகள்
சமீபத்தில் இப்பூங்கா பலவகையான சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஒட்டுமொத்த பூங்காவும் பொலிவுபெற்றுள்ளது. முக்கியமான மேம்பாட்டு நடவடிக்கைகளான இரண்டடுக்குத் தோட்டம் என்று அழைக்கப்படும் முகப்புப் பகுதியிலுள்ள முறைசார் தோட்டத்தை வலுவூட்டுதல், முதன்மைப் பாதையின் இரு பக்கங்களிலும் புல்தரைகளை நட்டு நிறுவுதல், சமச்சீராக பூக்கும் புதர்ச்செடிகளை நடுதல் மற்றும், அலங்கார நீர்வீழ்ச்சி அமைத்தல் ஆகியவை மேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும் மூழ்கு தோட்டம், பாறைத்தோட்டம், ஜப்பானியத் தோட்டம் ஆகியவையும் சீரமைக்கப்பட்டுள்ளன.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள மூலிகைத்தோட்டம் மற்றும் நறுமணத் தோட்டம் ஆகியவற்றில் மதிப்புமிக்க மருத்துவச் செடிகள் மற்றும் நறுமணச் செடிகள் நடப்பட்டுள்ளதால், சீரமைக்கப்பட்ட பூங்காவின் ஈர்ப்பு அங்கமாய் இது விளங்கும் வண்ணம் உள்ளது.
குழந்தைகள் பூங்கா
குழந்தைகள் பூங்காவும் மேம்படுத்தப்பட்டு பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட தளங்கள் மற்றும் நடைபாதைகள், புதிய மற்றும் பாதுகாப்பான விளையாட்டுக்கூடங்கள், அலங்கார வகை நிழல் மரங்கள் நடப்பட்டு பறவை மற்றும் முயல் வளர்ப்புக் கூண்டுகளோடு வடிவமைக்கப்பட்டுள்ளது.
பூங்காவிற்கு வரும் பொதுமக்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் சௌகரியத்தை உறுதிபடுத்துவதற்காக அடிப்படை வசதிகளான பாதுகாப்பான குடிநீர், புதிதாக அமைக்கப்பட்ட ஒய்வு அறைகள் திருத்தி அமைக்கப்பட்ட சாலைகள் மற்றும் பாதைகளை நிறுவுதல் சார்ந்த பணிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
பொது மக்களுக்கு வழிகாட்டும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள தகவல் அடங்கிய குறியீட்டுப் பலகைகள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தாவரங்களைபற்றி விஞ்ஞான ரிதியான விளக்கங்களைப் பெற உதவும் QR குறியீடுகள் அகியவை புதிய அம்சங்களாக தாவரவியல் பூங்காவிலை இடம்பெற்றுள்ளன.
காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையும் பூங்காவில் பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு ரூ.50, சிறுவர்களுக்கு ரூ.30 நுழைவுக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
One District One Focus Product: 728 மாவட்டங்களில் தலா ஒரு விவசாய பொருள் தேர்வு!!
இயற்கை முறை காய்கறி சாகுபடிக்கு மானியம் - விவசாயிகளுக்கு அழைப்பு!!
Share your comments