அரசு பள்ளிகளில் படித்துக் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தில், தகுதியான மாணவிகள், 25ம் தேதி முதல் வரும் 30ம் தேதி வரை நடைபெறும் சிறப்பு முகாம்கள் மூலம் பெயர்களைப் பதிவு செய்யலாம் என்ற அறிவிப்பு வெளிவந்தது.
மேலும் படிக்க: மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு!
உயர்கல்வி ஊக்கத்திட்டத்திற்கான பதிவு நேற்று தொடங்கியது. தொடக்க நாளான நேற்று ஒரு நாளில் மட்டுமே 15 ஆயிரம் மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் எஞ்சிய நாட்களில் இன்னும் எத்துனை விண்ணப்பங்கள் பூர்த்திச் செய்யப்பட இருக்கின்றனவோ என வெளிவட்டாரங்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க: முட்டை விலை அதிரடி உயர்வு! மக்கள் அவதி!!
தமிழகத்தில் பயிலும் மாணவிகளுக்கு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ. 1000 உதவித் தொகை வழங்குவதற்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. இது குறித்த முழு தகவல்களைப் பள்ளி மாணவிகள் பெறச் சிறப்பு முகாம்களும் அமைக்கப்பட இருக்கின்றன என்பது கூடுதல் தகவல். இது குறித்த சுற்றறிக்கையும் வெளிவந்துள்ளது.
மேலும் படிக்க: ஓய்வூதியம் பெறுவோருக்குச் சூப்பர் நியூஸ்! அடுத்தடுத்த சர்ப்ரைஸ்கள்!!
எவ்வாறு விண்ணப்பிப்பது என்று பார்த்தால் https://penkalvi.tn.gov.in என்ற என்ற இணையதளத்தின் மூலமாக மாணவிகள் தங்களின் தகவல்களைப் பதிவு செய்யலாம்.
தேவையான விவரங்கள்
- மாணவிகளின் விவரங்கள்
- வங்கிக் கணக்கு விவரம்
- ஆதார் எண்
- 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள்
- பள்ளி மாற்று சான்றிதழ்கள்
செயல்முறை என்று பார்த்தால் மாணவிகளின் விவரங்கள் அவர்களின் பொறுப்பாசிரியர்கள் மூலம் https://penkalvi.tn.gov.in என்ற பக்கத்தில் உள்ளீடு செய்யப்படுதல் வேண்டும். அடுத்து, மாணவிகளின் கைப்பேசிக்கு ஓடிபி வரும். அதன்பின்பு மாணவிகளின் விவரங்களைப் பதிவு செய்தல் வேண்டும். இறுதியாகக் கல்லூரி முதல்வர்கள் உறுதி செய்து விண்ணப்பம் நிறைவு பெறும்.
மேலும் படிக்க
மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்: HRA உயர்கிறது!
10, +12 மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பெறத் தேதி அறிவிப்பு!
Share your comments