பிரதான் மந்திரி அம்பலயா பட் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் வேலையில்லாத இளைஞர்களுக்கு அரசாங்கம் மாதம் ரூ.6,000 உதவித் தொகை வழங்குவதாக வாட்ஸ்அப் செய்தி பரவிக் கொண்டிருக்கிறது. இந்த வைரலான செய்தி போலியானது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசு அத்தகைய திட்டம் எதையும் செயல்படுத்தவில்லை என்று பிஐபி உண்மை கண்டறியும் சோதனையில் தெரியவந்துள்ளது. இதுபோன்ற செய்திகளை யாரிடமும் பகிரக்கூடாது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனுடன், அரசு தொடர்பான ஏதேனும் ஒரு திட்டத்தைப் பற்றிய தகவல்களைப் பெற விரும்பினால், அதிகாரப்பூர்வ இணையதளத்தை மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பொய்யான செய்தி பரவல்
மேற்கண்ட பொய்யான செய்திகளில் இருந்து விலகி இருக்கவும், இந்த செய்தியை யாரிடமும் பகிர வேண்டாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே இதுபோன்ற செய்திகளை யாருக்கும் அனுப்ப வேண்டாம். ஏதேனும் வைரல் செய்தியின் உண்மைத்தன்மையை அறிய விரும்பினால் socialmedia@pib.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற போலியான செய்திகள் தொடர்ந்து பரவிக்கொண்டுதான் இருக்கின்றன. குறிப்பாக வட மாநிலங்களில் இதுபோன்ற போலியான செய்திகளை நம்பி நிறையப் பேர் மோசடிகளில் சிக்கியுள்ளனர்.
பண மோசடி
வாட்ஸ் ஆப் போன்ற சமூக ஊடகங்களில் இதுபோன்ற போலியான பரப்பப்படுவது மட்டுமல்லாமல் அந்த செய்தியில் லிங்க் ஒன்றைக் கொடுத்து அதை கிளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அந்த லிங்க்கை கிளிக் செய்து உள்ளே சென்றால் வங்கிக் கணக்கு விவரங்கள், ஓடிபி, போன் நம்பர் போன்றவற்றை நம்பிடமிருந்து திருடி அதன் மூலம் பண மோசடி செய்யவும் வாய்ப்பு உள்ளது. எனவே இதுபோன்ற போலியான செய்திகளில் உஷாராக இருப்பது நல்லது.
மேலும் படிக்க
கூடுதல் பென்சன் பெற விண்ணப்பிக்கலாம்: EPFO அறிவிப்பு!
அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தி! அமலுக்கு வரப் போகுது புதிய விதி!
Share your comments