Rural Agriculture Work Experience Program for students to Awareness farmers
ஊரக வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மதுரை வேளாண்மை கல்லூரி மாணவர் மண் வளம் மேம்பாடு குறித்து விழிப்புணர்வு மற்றும் ஹெர்பிவாஷ் பொடி குறித்து செயல்முறை விளக்கம் வழங்கினர்.
மதுரை வேளாண்மை கல்லூரி மாணவர்கள் ஒன்பது பேர் கொண்ட குழு கொடை ரோடு பகுதியில் ஊரக வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின் கீழ் தங்கி பயின்று வருகின்றனர். இவர்கள் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவிலுள்ள கிராமங்களுக்கு சென்று பயிரை தாக்கும் நோய்களை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றனர்.
இவர்களுள் ஒருவரான கண்ணன் என்கிற மாணவர் விலாம்பட்டி கிராமத்தில் சாய் அர்கா ஹெர்பிவாஷ் என்னும் இயற்கையாய் தயாரிக்கப்பட்ட பொடியை பற்றிய செயல்முறை விளக்கத்தை கடந்த சனிக்கிழமை அன்று விவசாயிகளுக்கு செய்து காட்டினார்.
இன்றைய காலகட்டத்தில் விவசாயத்துறையில் பூச்சிகொல்லி, களைகொல்லி, மற்றும் பல இரசாயன மருந்துகளை பயன்படுத்தும் காரணத்தினால் நம்முடைய உடலுக்கு தீங்கு ஏற்படுகின்றது. அதனை காய், பழங்களில் இருந்து அகற்ற ஹெர்பிவாஷ் பொடி உதவுகிறது. இது ICAR -IIHR பெங்களூரின் புதுமையான தயாரிப்பு ஆகும். இதில் இரசாயன பொருள்கள் எதுவும் சேர்க்கப்படவில்லை மற்றும் 100% பாதுகாப்பானது . தாவரங்களில் இருந்து பெறப்பட்ட ஒரு தூள்களிலிருந்து இந்த பொடி தயாரிக்கப்படுகிறது. இது ஒரு எளிய முற்றும் முற்றிலும் பாதுகாப்பான மூலிகை தயாரிப்பு ஆகும். 30 வினாடிகளில் 99% கிருமி நாசினிகளை இந்த பொடி நீக்குகிறது.
பயன்படுத்தும் முறை:
1 லிட்டர் தண்ணீரில் 2 கிராம் அல்லது ½ தேக்கரண்டி பொடியினை கலந்து நன்கு கிளறவும். பழங்கள் மற்றும் காய்கறிகளை கைகளால் 30 விநாடிகள் மேன்மையான முறையில் கழுவவும். மீண்டும் சாதாரண நீரில் கழுவவும். 1 கிலோ பழங்கள் மற்றும் காய்கறிகளை கழுவுவதற்கு 1 லிட்டர் தண்ணீர் போதுமானது.
செயல் விளக்க நிகழ்வை தொடர்ந்து கந்தப்பகோட்டை கிராமத்தில் நேற்று மண் வளம் குறித்த விழிப்புணர்வை விவசாயிகளுக்கு மாணவர் கண்ணன் வழங்கினார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், கரிமப் பொருட்கள் மண்ணின் கட்டமைப்பை மேம்படுத்துகிறது. அழுகும் கரிமப் பொருட்கள் பாக்டீரியா, பூஞ்சை மற்றும் பிற உயிரினங்களுக்கு உணவுப் பொருளாகச் செயல்படுகிறது. கரிமப் பொருட்களின் இருப்பு பல கரையாத மண்ணின் கனிமங்களைக் கரைத்து தாவரங்களுக்குக் கிடைக்க வழிவகை செய்கிறது என்றார்.
கரிமப்பொருட்கள் அதிக கார்பன் பரிமாற்ற திறனை (CEC) பெற்றுள்ளதால், மண்ணின் ஊட்டச்சத்து வழங்கும் சக்தியில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. கரிமப்பொருட்கள் மண்ணின் நீர்ப்பிடிப்புத் திறனை அதிகரிக்கிறது. மேலும் கரிமபொருட்களானது கனமான மண்ணில் காற்றோட்டம் மற்றும் ஊடுருவலை மேம்படுத்துகிறது மற்றும் நீர், காற்றின் அரிப்பால் மண் இழப்பைக் குறைக்கிறது. மண்ணின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துகிறது.
சில தாவர உணவு உறுப்புகளின் முக்கிய ஆதாரமாகவும் கரிமப்பொருட்கள் செயல்படுகிறது (N, P, S போன்றவை). பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள் மற்றும் பிற கனரக உலோகங்களின் கழிவுகள் மண்ணின் தன்மையை குறைப்பதாகவும் விவசாயிகளிடம் கல்லூரி மாணவர் விழிப்புணர்வினை ஏற்படுத்தினார்.
மேலும் காண்க:
ஒரு நாளைக்கு சராசரியாக 8 விவசாயிகள் தற்கொலை- அரசு வெளியிட்ட பகீர் ரிப்போர்ட்
Share your comments