1. செய்திகள்

ஆவின் பால் உயர்வுக்கு சு.ஆ.பொன்னுசாமி கண்டனம்!

Deiva Bindhiya
Deiva Bindhiya
S.A Ponnusamy condemns the rise of Aavin Milk!

ஆவின் பால் பொருட்களின் விற்பனை விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் வேண்டுகொள் வைத்து வருகிறது. இது தொடர்பாக, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த கண்டன அறிக்கையில், பால் கொள்முதல் மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு என்கிற பொய்யான காரணத்தை கூறி கடந்த வாரம் தனியார் நிறுவனங்கள் பால், தயிர் விற்பனை விலையை உயர்த்தியது.

தற்போது தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவினில் நெய், பாதாம் பால் பவுடர், SMP (Skimmed Milk Powder), தயிர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பால் பொருட்களின் விற்பனை விலை உயர்ந்துள்ளது. அதிலும், குறிப்பாக ஆவின் நெய் லிட்டருக்கு 30.00ரூபாய் வரையிலும், SMP (Skimmed Milk Powder) 1Kg 40.00 ரூபாய், பாதாம் பால் பவுடர் 1Kg 100.00 ரூபாய், தயிர் லிட்டருக்கு 6.00 ரூபாய் என கடுமையாக விற்பனை விலை உயர்த்தப்பட்டு, புதிய விற்பனை விலை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

வழக்கமாக பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனை விலை உயர்வு தொடர்பாக, கடந்த வாரத்திற்கு முன் பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை வழங்கி அமல்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போதைய விற்பனை விலை உயர்வு இன்று (04.03.2022) முதல் அமுலுக்கு வருகிறது. இந்த தகவலை 24 மணி நேரத்திற்கு முன்னதாக அதாவது நேற்று (03.03.2022) ஆவின் விற்பனை பிரிவு பொதுமேலாளர் அவர்களால் வெளியிடப்பட்டது. இதனை, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டித்தனர்.

ஏற்கனவே தனியார் பால் நிறுவனங்களுக்கு சாதகமாக ஆவின் பால் விற்பனையை குறைக்க செயற்கையான பால் தட்டுப்பாட்டை ஆவின் அதிகாரிகள் உருவாக்கி வருகின்றன. இந்நிலையில் தற்போது ஆவின் பால் பொருட்களின் கடுமையான விற்பனை விலை உயர்வு அதனை உறுதி செய்வதாக உள்ளது.

எனவே தமிழக முதல்வர் அவர்கள் ஆவின் பால் பொருட்கள் விற்பனை விலை உயர்வு விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு பொதுமக்கள் தலையில் ஆவின் நிர்வாகம் சுமத்தியிருக்கும் விற்பனை விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற உத்தரவிட கோரியுள்ளது. மேலும், ஆவின் பால் தட்டுப்பாடின்றி விநியோகம் செய்யவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க:

அறிக்கை: FPOகளின் நிதியுதவிக்கு முன்னுரிமைத் தேவை

உக்ரைன் - ரஷ்யா போர் எதிரொலி: SBI வங்கி அதிரடி அறிவிப்பு!

English Summary: S.A Ponnusamy condemns the rise of Aavin Milk! Published on: 04 March 2022, 05:37 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.