1. செய்திகள்

வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் நடத்திய சக்கா ஜாம் போராட்டம்!

KJ Staff
KJ Staff
Farmers Protest
Credit : The Print

மத்திய அரசு புதிதாக கொண்டு வந்த வேளாண் சட்டங்களை (Agri Laws) ரத்து செய்யக்கோரி விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு விதங்களில் மத்திய அரசிடம் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இது தொடர்பாக விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு நடத்திய பலகட்டப் பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை.

சக்கா ஜாம் போராட்டம்

பல கட்டப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில் விவசாயிகள் போராட்டம் பல்வேறு படிநிலைகளைக் கடந்து வீறுநடை போட்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக ‘சக்கா ஜாம் (Sakka Jam)' என்ற பெயரில் நாடு முழுவதும் நேற்று மாநில, தேசிய நெடுஞ்சாலைகளை (National Highways) முடக்கும் வகையில் முற்றுகை போராட்டத்தை முன்னெடுத்தனர். பஞ்சாப், ஹரியானா மாநிலத்தின் பெரும்பாலான சாலைகள் முடக்கப்பட்டு போக்குவரத்து ஏதுமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. பாதுகாப்பு பணியில் 144 UP-PAC கம்பெனிகள், 6 பாரா மிலிட்டரி கம்பெனிகள் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.

இணைய சேவை துண்டிப்பு

கர்நாடக மாநிலத்தின் பல்வேறு நெடுஞ்சாலைகளில் ஏராளமான விவசாயிகள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக பெங்களூருவிற்குள் செல்லவும், வெளியே வர முடியாமலும் வாகனங்கள் சிரமத்திற்கு ஆளாகின. விவசாயிகளுக்கு ஆதரவாக சில கன்னட அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைநகர் டெல்லியில் சாஹீதி பார்க் (Sahithi Park) பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிங்குவா எல்லைப் பகுதியில் இணைய சேவை (Network) துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு மிகவும் அமைதியான முறையில் போராட்டம் நடந்தது. லால் குயிலா, ஜும்மா மசூதி, ஜன்பாத், மத்திய தலைமைச் செயலகம் உள்ளிட்ட 10 மெட்ரோ ரயில் (Metro rail) நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் கதவுகள் மூடப்பட்டிருந்தன.

பஞ்சாப் மாநிலத்தின் 15 மாவட்டங்களின் 33 இடங்களில் சாலைகள் (Roads) முடக்கப்பட்டிருந்தன. இதில் சங்ருரு, பர்னாலா, பதிண்டா ஆகிய மாவட்டங்கள் அடங்கும். நாடு முழுவதும் நண்பகல் 12 மணிக்கு தொடங்கிய போராட்டம் பிற்பகல் 3 மணிக்கு வெற்றிகரமாக நிறைவடைந்தது.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

நகைகளை வைத்து விவசாயிகள் பெற்ற பயிர்க் கடனும் தள்ளுபடி! அமைச்சர் செல்லூர் ராஜூ

விவசாயிகளுக்கு இனிப்பான செய்தி! இன்று முதல் பயன்பாட்டிற்கு வரும் நெல் கொள்முதல் நிலையங்கள்!

English Summary: Sakka Jam protest by farmers across the country against agricultural laws Published on: 07 February 2021, 08:52 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.