1. செய்திகள்

100 நாள் வேலை சம்பளம் நாளை முதல் உயர்வு!

Poonguzhali R
Poonguzhali R

Salary of 100 days work increase from tomorrow!

தமிழகத்தில் நாளை முதல் பணிப்புரியும் 100 நாள் வேலைத் தொழிலாளர்களின் தினக்கூலி ரூ.294 ஆக உயர்த்தப்படும் அதோடு, கிளஸ்டர்களின் எண்ணிக்கை 20,000 லிருந்து 30,000 ஆக உயர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.

MGNREGA க்கான ஊதியம் ஏப்ரல் 1 முதல் நாளொன்றுக்கு ரூ 294 ஆக உயர்த்தப்படும். வேலை நாட்கள் மற்றும் கிளஸ்டர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கப்படும். அதொடு, ஊரக வளர்ச்சித்துறை ஐ.பெரியசாமி தனது துறைக்கான மானியக் கோரிக்கைக்கு பதிலளிக்கும் போது சட்டசபையில் வியாழக்கிழமை தெரிவித்தார். கிளஸ்டர்களின் எண்ணிக்கை 20,000 லிருந்து 30,000 ஆக உயர்த்தப்படும் என்றும், இரண்டு கிமீ சுற்றளவில் உள்ளவர்களுக்கு வேலை வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க: ஆண் குழந்தைகளுக்கான தபால் அலுவலக திட்டம்: இன்றே தொடங்குங்கள்!

அதற்குப் பதிலளித்த அமைச்சர், முந்தைய அதிமுக அரசு அண்ணா கிராம மருமலர்ச்சித் திட்டம் என்ற பெயரைத் தாய்த் திட்டமாக மாற்றி, பெரியார் நினைவு சமத்துவபுரத்தைப் பராமரிக்கத் தவறிவிட்டது. ஆனைத்து கிராம அண்ணா மருமலர்ச்சி திட்டத்தினை தற்போதைய அரசு எவ்வாறு திறம்பட மறுதொடக்கம் செய்தது மற்றும் பெரியார் நினைவு சமத்துவபுரத்தை சீரமைத்தது என்பதை அவர் விரிவாக எடுத்துரைத்தார்.

மேலும் படிக்க: IRCTC-யின் புதிய மெனு கார்டில் தினை அடிப்படையிலான உணவு சேர்ப்பு

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமின் (PMAY-G) பற்றி பேசிய அமைச்சர், இந்த திட்டத்தின் கீழ் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான நிதிப் பகிர்வு விகிதம் 60:40 ஆக உள்ளது. ஆனால் தமிழகத்தில் இந்த விகிதம் 38:62 ஆக உள்ளது. மாநில அரசு ரூ.1.72 லட்சம் வழங்கியது, மத்திய அரசின் பங்கு ரூ.1.04 லட்சம். "எனவே, PMAY-G இன் கீழ் கட்டப்படும் வீடுகளில் புதிய தகடு வைக்கப்படும்" என்று அமைச்சர் கூறியுள்ளார்.

அரசுப் பள்ளிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்து பேசிய அமைச்சர், இந்த ஆண்டு அனைத்து அரசு தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கும் சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,
மேலும், மாவட்ட பஞ்சாயத்து தலைவர்களுக்கு இந்த ஆண்டு கார் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

சிறப்பம்சங்களாகக் கீழ் வருவன உள்ளன.

  • விளிம்பு நிலை மக்களின் வாழ்விடப் பணிகளை முடிக்க ரூ.1,500 கோடி
  • கிராமங்களில் சமூக உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1,000 கோடி
  • 10 லட்சம் வீடுகளுக்கு குழாய் நீர் இணைப்புகளுக்கு ரூ.1,000 கோடி
  • பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் 70 லட்சம் மரக்கன்றுகள் நட ரூ.275 கோடி
  • 500 புதிய அங்கன்வாடிகளுக்கு ரூ.70 கோடி
  • கிராமப்புற துப்புரவு தொழிலாளர்களின் மாத ஊதியம் ரூ.3,600-லிருந்து ரூ.5,000 ஆக உயர்த்தப்படும்.
  • 2,043 மதிய உணவு மையங்கள் அமைக்க ரூ.154 கோடி

மேலும் படிக்க

வெயிலைத் தணிக்க வரப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் தகவல்!!

மாடித்தோட்டம் அமைக்க மானியம்! ஆட்சியர் அறிவிப்பு!

English Summary: Salary of 100 days work increase from tomorrow!

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.