1.திருடு போன செல்போன்களை கண்டுபிடிக்க ‘சஞ்சார் சாத்தி’ என்ற புதிய இணையதள சேவை
நாடு முழுவதும் திருடு போன செல்போன்களை கண்டுபிடிக்க ‘சஞ்சார் சாத்தி’ என்ற புதிய இணையதள சேவை.
ஐ.எம்.இ.ஐ. எண்ணை பதிவு செய்தால் மொபைலை மீட்டுத் தரும் வசதியை இன்று அறிமுகம் செய்கிறது மத்திய அரசு.
2.மெட்ரோ ரெயில் டிக்கெட்டை வாட்ஸ்அப் செயலி மூலம் எளிமையாக எடுக்கும் வசதி, சென்னை மெட்ரோ நிர்வாகம் இன்று அறிமுகம்
மெட்ரோ ரெயில் டிக்கெட்டை வாட்ஸ்அப் செயலி மூலம் எளிமையாக எடுக்கும் வசதியை சென்னை மெட்ரோ நிர்வாகம் இன்று அறிமுகம் செய்ய உள்ளது.
மெட்ரோ ரெயில் டிக்கெட்டை வாட்ஸ்அப் மூலம் பெறும் வசதி சென்னை திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இன்று (புதன்கிழமை) அறிமுகம் செய்கிறது. வீட்டிலோ அல்லது அலுவலகத்தில் இருந்தோ கிளம்பும்போது மெட்ரோ நிர்வாகம் கொடுக்கவுள்ள போன் நம்பருக்கு புறப்படும் இடம் மற்றும் சேரும் இடத்தை அனுப்பி, யுபிஐ மூலம் கட்டணத்தை செலுத்தி டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம். உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு வரும் 'கியூஆர் கோடை' பயணித்தின்போது ஸ்கேன் செய்து பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3.விலை குறைந்தது தங்கம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்து ரூ. 45,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.5,670-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
4.'கோடையில் தட்டுப்பாடு இன்றி மின்சார வினியோகம் - அமைச்சர் செந்தில் பாலாஜி
சென்னையில் அதிகரித்த 3 ஆயிரத்து 991 மெகாவாட் மின்சாரத்தை தட்டுப்பாடு இன்றி வினியோகம் செய்து மின்சார வாரியம் சாதனை படைத்துள்ளது' என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் வீடுகளில் மின்விசிறி, ஏ.சி. மற்றும் ஏர்கூலர் போன்ற மின்சார சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
எனவே மின்சாரத்தின் தேவையும் அதிகரித்து வருகிறது. அதன்படி அதிகரித்து வரும் மின்சார தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாடு மின்சார வாரியம் தயார் நிலையில் முன்னேற்பாடுகளை செய்து தட்டுப்பாடு இன்றி மின்சார வினியோகம் செய்து வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் சென்னையில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக மின்நுகர்வு 3 ஆயிரத்து 991 மெகாவாட் (84 ஆயிரத்து 51 மில்லியன் யூனிட்டுகள்) பயன்படுத்தப்பட்டு உள்ளது.
5.வாரம் ஆறு நாட்கள் இனி ஜனாதிபதி மாளிகையை பார்வையிடலாம்
ஜனாதிபதி மாளிகை, பொதுமக்கள் பார்வைக்கு ஏற்கனவே திறந்துவிடப்பட்டுள்ளது. பிரதான கட்டிடம், புல்வெளி பகுதி, அசோகா மண்டபம் உள்ளிட்ட பகுதிகள் முதல் பகுதியாகவும், அருங்காட்சியக வளாகம் 2-வது பகுதியாகவும் பிரிக்கப்பட்டு பார்வையிட அனுமதிக்கப்படுகின்றன. 2 பகுதிகளையும் செவ்வாய்க்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 5 நாட்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், ஜனாதிபதி மாளிகை அருங்காட்சியக வளாகத்தை திங்கட்கிழமை தவிர, வாரத்தில் 6 நாட்கள் பார்வையிடலாம் என்று ஜனாதிபதி மாளிகை அறிவித்துள்ளது. ஜூன் 1-ந் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது.பொதுமக்கள் காலை 9.30 மணி முதல் மாைல 4.30 மணிவரை 7 தனித்தனி நேரங்களில் பார்வையிட ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க
ரேசன் கடைகளுக்கு ISO தரச் சான்றிதழ்: கூட்டுறவுத் துறை செயலரின் அருமையான முயற்சி!
38-ல் இருந்து 42- அரசு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த முதல்வர்
Share your comments