நடப்பு நிதியாண்டில் ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்க இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம் என்பது தேசிய வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி கொடுக்கும் வட்டி விகிதமாகும். இதன் எதிரொலியாக SBI தனது வாடிக்கையாளர்களுக்கு வட்டி விகிதத்தை குறைக்க முடிவு செய்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 6.25% இல் இருந்து 6% ஆக குறைக்க உள்ளது. இதன் காரணமாக மே 1 ஆம் தேதியிலிருந்து புதிய வட்டி விகிதத்தினை அறிமுக படுத்த முடிவு செய்துள்ளது SBI . ஏப்ரல் 10 தேதி முதல் MCLR வட்டி விகிதத்தை 8.55% இல் இருந்து 8.50% ஆக குறைக்க முடிவு செய்துள்ளது.
வீட்டு கடன் 30 இலட்சம் வரையிலான கடனிற்கு .10% வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. இதனால் 8.70 % -9 % ஆக இருந்த வட்டி விகிதம் 8.60% - 8.90% ஆக குறைக்க பட உள்ளது. வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு இது ஒரு நற்செய்தி ஆகும்.
SBI வங்கி சேமிப்பு கணக்கில் 1 லட்சத்திற்கு மேல் வைத்திருப்பவர்களுக்கு வட்டி விகிதம் 3.50% இல் இருந்து 3.25%ஆக குறைக்க உள்ளது. கடன்களின் மீதான வட்டி விதம் குறைத்ததினால், சேமிப்பு கணக்கிலும் வட்டி விதம் குறைத்துள்ளது.
Share your comments