தமிழகத்தில் அனைத்திற்கும் தளர்வுகள் அறிவித்திருக்கும் நிலையில் இரண்டு மாதங்களுக்கு பிறகு இயல்பு நிலை திரும்பியுள்ள நிலையில் பள்ளிகள் திறக்கப்படும் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த இரு நாட்களாக தொடர்ந்து 4000க்கு கீழ் பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது. பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மாநிலம் முழுவதும் நேற்று முதல் பல்வேறு தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளது.
குறிப்பிடத்தக்க தளர்வுகளில் பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், உயிரியல் பூங்காக்கள் என சிலவற்றுக்கு மட்டுமே தடை தொடர்ந்து நீடித்து வருகிறது. கடந்த கல்வி ஆண்டு முழுவதும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடைபெற்றது. இதனால் மாணவர்கள் மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாவதாக மருத்துவர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பல தரப்பினரும் தெரிவித்து வந்தனர்.
- தற்போது தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகள் எப்போது தொடங்கும் என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்படுகின்றன.மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் கல்லூரிகளில் தொடங்கும். ஆகஸ்ட் முதல் வாரத்தில் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிரியர்கள் சங்கத்தினர் பள்ளிகளை திறக்கச் சொல்லி தொடர்ந்து வலியுறுத்தி வருவதால் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் இது குறித்து பதிலளித்துள்ளார். “தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தக்கூடாது என்ற கருத்துக்களே அதிகம் வருகின்றன. சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர் முடிவுகளின் படியே நீட் தேர்வு குறித்த நடவடிக்கை இருக்கும் என்று செய்தியாளர்களைச் சந்தித்த போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். மருத்துவர்களின் ஆலோசனை பெற்ற பின்னரே பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க
அடுத்த மாதம் பள்ளிகள் திறக்கப்படுமா?விரைவில் அறிவிப்பு!
அரசு பள்ளியில் சேரும் மாணவருக்கு ரூ.1,000 பரிசு- அசத்தும் தலைமை ஆசிரியர்!
பள்ளிகள் தற்போது திறக்கப்படாது! பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அறிவிப்பு!
Share your comments