நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைப்பெற்று வரும் நிலையில், இன்று மக்களவையில் அத்துமீறி நுழைந்த இருவர் வண்ண புகை குச்சிகளை கையில் ஏந்தியவாறு சபாநாயகரை நோக்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய சபையாக கருதப்படும் நாடாளுமன்றத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டு இதே தேதியில் தான் தாக்குதல் சம்பவம் நடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது. மக்களைவை கூட்டத்தொடரில் பங்கேற்றிருந்த எம்.பிக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டன இச்சம்பவத்திற்கு பிறகு. நாடாளுமன்றத்தில் இந்த சம்பவம் உச்சக்கட்ட பாதுகாப்பில் உள்ள குறைபாடு என எதிர்க்கட்சிகள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளன.
சன்சாத் டிவியின் நேரலை காட்சிகளில், நீல நிற ஜாக்கெட் அணிந்த ஒரு நபர் ஹவுஸில் உள்ள பெஞ்சுகளுக்கு மேல் குதிப்பதைக் காணலாம். பின்னர் அவருடன் மற்றவரும் சேர்ந்து "தனஷாஹி நஹி சலேகி (சர்வாதிகாரம் வெல்லாது)" என்று கோஷமிட்டதாக பல எம்.பி.க்கள் ஊடகங்களிடம் தெரிவித்தனர். இச்சம்பவத்திற்கு பின் அவைத் தலைவர் ராஜேந்திர அகர்வால் உடனடியாக அமர்வை ஒத்திவைத்தார்.
"சபையை உடனடியாக ஒத்திவைக்க வேண்டியது அவசியம். நான் செய்ய வேண்டியதைச் செய்தேன்," என்று அவர் செய்தி சேனலான இந்தியா டுடேவிடம் தெரிவித்துள்ளார், இந்த விவகாரம் குறித்தும் தீவிரமாக விசாரிக்கப்படும் எனவும் கூறினார்.
ஊடுருவியவர்கள் யார்? போலீஸ் என்ன சொன்னது?
ஊடுருவியவர்கள் யார் என இன்னும் அடையாளம் காணப்படவில்லை. நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு அதிகாரிகளின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் "மஞ்சள் நிற புகையை வெளியேற்றும் கேன்கள் போன்றவற்றை ஏந்தி பாராளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்தியதற்காக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்று டெல்லி காவல்துறை கூறியதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது
காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், இரண்டு பேர் பொது கேலரியில் இருந்து லோக்சபா அறைக்குள் குதித்து, பின்னர் உறுப்பினர்களால் தாக்கப்பட்டனர். அதன்பின்னர் பாதுகாப்புப் பணியாளர்களால் வெளியே கொண்டு வரப்பட்டனர். அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இது நிச்சயமாக ஒரு பாதுகாப்பு மீறலாகும். இன்று நாங்கள் 2001-ல் (நாடாளுமன்றத் தாக்குதல் சம்பவத்தில்) உயிர் தியாகம் செய்தவர்களின் நினைவு தினம் அனுசரித்த வேளையில் இந்த சம்பவம் துரதிஷ்டவசமானது," என்றும் அவர் கூறினார்.
காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் ஏஎன்ஐயிடம் கூறியதாவது: திடீரென 20 வயதுடைய இரண்டு இளைஞர்கள் பார்வையாளர்கள் கேலரியில் இருந்து சபைக்குள் குதித்து கையில் வைத்திருந்த குப்பிகளை திறந்தனர். இந்த குப்பிகளில் இருந்து மஞ்சள் புகை வெளியேறியது. அவர்களில் ஒருவர் சபாநாயகர் நாற்காலியை நோக்கி ஓட முயன்றார்.
அவர்கள் சில முழக்கங்களை எழுப்பினர். புகை விஷமாக இருந்திருக்கலாம். குறிப்பாக 2001 ஆம் ஆண்டு பாராளுமன்றம் தாக்கப்பட்ட டிசம்பர் 13- ஆம் தேதியான அதே நாளில் இச்சம்பவம் நடைப்பெற்றிருப்பது ஒரு கடுமையான பாதுகாப்பு மீறலாகும்." இச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைப்பெற்று வருகிறது.
Read also:
தொடர்ந்து 5 வது நாளாக தங்கத்தின் விலை சரிவு- நகை பிரியர்கள் நிம்மதி!
விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Share your comments