ஈரோடில் உள்ள சிவகிரி விற்பனை கூடத்தில் ரூ. 34 லட்சத்துக்கும் மேல் சமையலுக்குப் பயன்படுத்தும் எள்-ஆனது ஏலம் போயுள்ளது. இது எள் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியினைத் தந்துள்ளது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
எள்-ஆனது சமையல், சமையல் எண்ணெய் தயாரிப்பு முதலானவைகளுக்குப் பயன்படுகின்றது. இந்த எள்ளுக்கான ஏலம் ஈரோடு மாவட்டம் சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் சிவகிரி-யைச் சுற்றியுள்ள எள் விவசாயிகள் சுமார் 413 மூட்டைகளை விற்பனைக்கு எனக் கொண்டு வந்தனர்.
விவசாயிகள் கொண்டு வந்த எள்ளில் கருப்பு ரக எள் ஒரு கிலோ குறைந்த பட்ச விலையில் 93 ரூபாய் 59 காசு ஆகவும், அதிகபட்ச விலையாக 117 ரூபாய் 42 காசு ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. சராசரியாக ரூ. 110.19 காசுக்கும் விற்பனையானது.
மேலும் படிக்க: ஆடு வளர்க்க 90% மானியம்! விண்ணப்பித்துப் பயனடையுங்க!!
இதுவே, சிவப்பு ரக எள்-ஆனது குறைந்தபட்சமாக 90 ரூபாய் 90 காசுக்கும் அதிகபட்சமாக 127 ரூபாய் 99 காசுக்கும், சராசரியாக 114 ரூபாய் 80 காசுக்கும் விற்பனையானது.வெள்ளை ரகம் என எடுத்துக் கொண்டால் குறைந்தபட்சமாக 98 ரூபாய் 49 காசுக்கும், அதிகபட்சமாக 118 ரூபாய் 69 காசுக்கும், அதிகபட்சமாக 108 ரூபாய் 59 காசுக்கும் ஏலம் சென்றது.
மேலும் படிக்க: ஆடு வளர்ப்புக்கு ரூ. 4 லட்சம் தரும் மத்திய அரசின் திட்டம்!!
இவ்வாறு நடந்த எள் ஏலத்தில் மொத்தமாக 30,572 கிலோ எடைகொண்ட எள் சுமார் ரூ. 34 லட்சத்து 24 ஆயிரத்து 296 -க்கு விற்பனையாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
7th Pay Commission: அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு! பெரிய ஏற்றம்!!
7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு இரட்டை மகிழ்ச்சி! குவியும் சலுகைகள்!!
Share your comments