சிறார் குற்றச்செயல்களுக்குத் தீர்வு காணும் வகையில் அமையும் ‘சிற்பி’ எனும் திட்டத்தைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இது குறித்த விரிவான தகவலை இப்பதிவு விளக்குகிறது.
சென்னையில் பெருகி வரும் குற்றச்செயல்களைத் தடுக்க, மாநகர காவல் துறை சார்பாகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாகச் சிறுவர்களை நல்வழிப்படுத்துவதற்கான புதிய திட்டத்தினைத் தொடங்க கடந்த ஆண்டில் சென்னைகாவல் துறை முடிவெடுத்திருந்தது.
மேலும் படிக்க: பெண்களுக்கு ரூ. 6000 கிடைக்கும் மத்திய அரசின் திட்டம்: இன்றே அப்ளை பண்ணுங்க!
இதன் அடிப்படையில், சிறார் குற்றச்செயல்களுக்குத் தீர்வு காணும் நோக்கிலும், பாதிக்கப்படும் சிறுவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும் எனவும், சென்னையில் ”சிற்பி”என்ற திட்டத்தை அறிமுகம் செய்ய காவல் துறை நடவடிக்கை எடுத்திருந்தது. அதிலும் குறிப்பாக, சென்னையில் 100 மாநகராட்சி பள்ளிகளில் தலா 50 மாணவர்களைக் கொண்டு சிற்பி திட்டத்தைச் சென்னை மாநகர காவல் துறை செயல்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: PM Kisan: ரூ. 2000 பற்றித் தெரிந்துகொள்ள இந்த நம்பரை அழையுங்க!
சிற்பி திட்டப்படி, 8ம் வகுப்பு முதல் உள்ள மாணவர்களை தேர்வுசெய்து, அவர்களுக்குத் தனி சீருடை வழங்கப்பட இருக்கிறது. அதேபோன்று, பள்ளிகளில் தேசிய மாணவர் படை போன்று இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த காவல் துறை திட்டமிட்டுள்ளது.
சிற்பி திட்டச் செயல்முறைகள்கீழ்வருவனவும் இந்த திட்டத்தின்கீழ் செயல்பட இருக்கின்றன. அவை,
- மாணவர்களைச் சுற்றுலா அழைத்துச் செல்லுதல்
- புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களுக்கு அழைத்துச் சென்று அவர்களின் திறன்களை மேம்படுத்துதல்
- சமூகத்தில் பொறுப்புள்ளவர்களாக மாற்றும் நிலையில் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து சட்ட கல்வியறிவு பெறச் செய்தல் முதலானவை இத்திட்டத்தில் இருக்கின்றன.
மேலும் படிக்க: அதிரடியாகக் குறைந்த முட்டையின் விலை!
இதுதவிர, காவல் கட்டுப்பாட்டு அறை அவசர எண், காவலன் செயலி, முதியோர் உதவி எண், காவல் கரங்கள் முதலான அவசர கால எண்கள் குறித்து மாணவர்களுக்குத் தெரியப்படுத்துவதுடன், அவர்களைக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
போதைப் பொருள் நடமாட்டத்தினைத் தடுக்க அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளில் பள்ளி மாணவர்களின் தகவல்களைப் பெறும் வகையில், அவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த திட்டத்தினைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக சென்னையில் 100 மாநகராட்சி பள்ளிகளில் தலா 50 மாணவர்களை கொண்டு இந்த சிற்பி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
இனி முன்பதிவு டிக்கெட்டை வேறு ஒருவருக்கு மாற்றலாம்: புதிய மாற்றம்!
தமிழக மாணவர்கள் வெளிநாட்டில் படிக்க புதிய திட்டம் அறிவிப்பு!
Share your comments