Pongal Gift
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கடந்த மாதம் விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் அரசு சார்பில் பொங்கல் பரிசுத்தொகை ரூ.1000 வழங்கப்பட்டது. அதனை 4 லட்சத்து 40,000 பேர் வாங்கவில்லை என கூட்டுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
பொங்கல் தொகை
தமிழக மக்களின் பாரம்பரிய பண்டிகையாக பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில் ரொக்கத்தொகை மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு அரசு சார்பில் ரூ.1000 மற்றும் பொங்கல் வைக்க தேவையான பொருள்கள் வழங்கப்பட்டது. மேலும் ஏழை எளிய மக்களும் பொங்கல் பண்டிகை கொண்டாடும் வகையில் அரசு இந்த பொங்கல் பரிசு மற்றும் ரொக்கத் தொகை வழங்குகிறது.
பொதுமக்களுக்கு முன்னதாகவே டோக்கன் வழங்கப்பட்டு பொருள்கள் வழங்கப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசு 1,000 ரூபாயை 4 லட்சத்து 40,000 பேர் வாங்கவில்லை என கூட்டுறவு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு முன்னதாகவும், பொங்கல் பண்டிகை முடிந்த பின் கூட பலருக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்ட நிலையில், பலர் ரொக்கம் வாங்காமல் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும் படிக்க
மத்திய பட்ஜெட் 2023: PM Kisan திட்டத்தில் அதிகரிக்கப்படும் நிதி!
Share your comments