தமிழ்நாட்டில் ரேஷன் பொருட்கள் பெறுவோருக்கான தரநிலைகள் தயாராகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ஒன்றிய உணவு மற்றும் பொது விநியோகத் துறை ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கான தரநிலைகளை மாற்றபோவதாக தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாநிலங்களுடன் பல சுற்று கூட்டங்களும் நடத்தப்பட்டன.
மாற்றப்படும் தரநிலைகள் இந்த மாதத்திலிருந்து நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.உணவு மற்றும் பொது விநியோகத் துறை தெரிவித்துள்ளதாவது தற்போது நாட்டில் 80 கோடி மக்கள் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தை அதாவது National Food Security Act-NFSA பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது 2020 ஆம் ஆண்டு வரை 32 மாவட்டங்களில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு (ONORC) திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. NFSA இன் கீழ் வரும் மக்கள்தொகையில் 86 சதவீதம் மக்கள் இந்த திட்டத்தை பயன்படுத்தி வருகின்றனர். சுமார் 80 கோடி மக்கள் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்களை பெற்று பயனடைந்து வருகின்றனர்.
கடந்த ஆறு மாதங்களாக,மக்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பது தொடர்பான மாற்றங்கள் குறித்து மாநிலங்களுடன் ஒரு கூட்டம் நடைபெற்று வருகிறது. மாநிலங்கள் வழங்கிய பரிந்துரைகளை இணைத்து, புதிய தரநிலைகள் தயாரித்து வருகின்றன. இதனை குறித்த முடிவுகள் இந்த மாதத்தில் இறுதி செய்யப்படும். புதிய தரத்தை அமல்படுத்திய பின்னர், தகுதியான நபர்கள் மட்டுமே சில சலுகைகளை பெறுவார்கள், தகுதியற்றவர்கள் அந்த சலுகைகள் பெற இயலாது.
மேலும் படிக்க:
இன்று முதல் ரேஷன் கடைகள் இயங்கும்: தமிழக அரசு!
4 கோடி ரேஷன் கார்டுகள் ரத்து - குடும்ப அட்டைதாரர்கள் அதிர்ச்சி!
Share your comments