1. செய்திகள்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்!

R. Balakrishnan
R. Balakrishnan
Special trains running on the occasion of Onam!

மலையாள மொழி பேசும் கேரள மக்கள் மற்றும் தென் தமிழகத்தில் கொண்டாடப்படும் பாரம்பரிய பண்டிகைகளுள் ஒன்று ஓணம். மகாபலி சக்கரவர்த்தி ஆண்டுதோறும் தன்னுடைய மக்களை காண வருவதாகவும், அவரை வரவேற்கும் வகையில் திருவோணம் கொண்டாடப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் இப்பண்டிகை 10 நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்தாண்டு ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 8-ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.

ஓணம் பண்டிகை (Onam Festival)

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றில் சிக்கித் தவித்ததால் கேரள மக்கள் ஓணம் பண்டிகையை எளிமையாக கொண்டாடிய நிலையில், இந்தாண்டு வெகு விமர்சையாக கொண்டாடட காத்திருக்கின்றனர். ஆனாலும், தென்மேற்கு பருவமழை, குரங்கம்மை பிரச்சனை உள்ளிட்டவைகள் அம்மாநில அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது. ஓணம் பண்டிகையை பொறுத்தவரையில் மிக முக்கியமான பண்டிகை என்பதால் நாடு முழுவதும் கல்வி, தொழில் உள்ளிட்டவைகளுக்காக சென்றுள்ள மலையாளிகள் சொந்த ஊருக்கு திரும்புவார்கள். அதேநேரத்தில் கைகொட்டுக்களி, புலிக்களி, யானைத்திருவிழா, கயிறு இழுத்தல், களறி, படகுப்போட்டிகள், சிறப்பு உணவுகள், அத்தப்பூக்கோலம், பாரம்பரிய நடனப் போட்டிகளென 10 நாட்களும் பல விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் கேரளா செல்வது வழக்கம்.

சிறப்பு ரயில்கள் (Special Trains)

இதனால் பேருந்துகள் மற்றும் ரயில்களில் கூட்ட நெரிசல் ஏற்படும் அதனை தவிர்க்க தமிழகத்தின் எல்லை மாவட்டங்களான கோவை, குமரி, நீலகிரி ஆகிய பகுதிகளில் இருந்து இருந்து மாநில அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கும். அந்த வகையில் ஓணம் பண்டிகைக்காக சென்னையில் இருந்து தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்கள் வழியாக கேரளாவுக்கு 8 ஜோடி சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தாம்பரத்தில் இருந்து எழும்பூர், பெரம்பூர், காட்பாடி, சேலம், கோவை, பாலக்காடு, திரூர் வழியாக மங்களூருவுக்கு செப்டம்பர் 2-ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் இந்த ரயில் மங்களூருவில் இருந்து தாம்பரத்திற்கு இயக்கப்படும். அதேபோல் தாம்பரத்தில் இருந்து எழும்பூர், காட்பாடி, சேலம், திருப்பூர், கோவை, எர்னாகுளம், கோட்டயம் வழியாக கொச்சுவேலிக்கு செப்.4-ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் செப்.5-ம் தேதி கொச்சுவேலியில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்.

மேலும், நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், ஆலுவா, கோவை, சேலம், காட்பாடி வழியாக எழும்பூருக்கு செப்டம்பர் 11-ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. 

சென்னை எழும்பூரில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, மதுரை, நெல்லை வழியாக நாகர்கோவிலுக்கு செப்.12-ம் தேதி சிறப்பு ரயில் ஒன்று இயக்கப்படுகிறது.

மேலும் படிக்க

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: புதிய ரயில் சேவை தொடக்கம்!

ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் அறிவிப்பை வெளியிட்டது IRCTC!

English Summary: Special trains running on the occasion of Onam! Published on: 09 August 2022, 12:56 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.