தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-24 ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை பாடப்பிரிவுகளில் மாணாக்கர் சேர்க்கை Spot Admission நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான முழுமையான தகவலை காணலாம்.
தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-24 ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை பாடப்பிரிவுகளில் மாணாக்கர் சேர்க்கை முழுமையாக நிரப்பப்பாடமல் காலியாக இருந்த சில பாடப்பிரிவுகளுக்கு, நேரடி மாணாக்கப் சேர்க்கை (Spot Admission) சார்ந்த கல்லூரிகளில் 21.08.2023 முதல் நடத்தப்பட்டது. இருப்பினும், சில அரசு கல்லூரிகளில் மாணாக்கர் சேர்க்கைகான இடங்கள் முழுமையாக நிரப்படாமல் சில பாடப்பிரிவுகளில் காலியாக உள்ளன.
எனவே, இதுவரை விண்ணப்பிக்காத மாணாக்கர்கள். இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக www.tngasa.in மற்றும் www.tngasa.org என்ற இணையதளங்கள் வாயிலாக முதலாமண்டு மாணாக்கர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் 12.09.2023 முதல் 14.09.2023 வரை மூன்று நாட்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. நிரப்பப்படாமல் காலியாக உள்ள கல்லூரி வாரியான பாடப்பிரிவுகளின் விவரங்களை www.tngasa.in என்ற இணையதளத்தில் "TNGASA2023-UG VACANCY" என்ற தொகுப்பில் காணலாம்.
மேலும் எந்தந்த கல்லூரிகளில், எந்தந்த பாடப்பரிவுகளில் மேற்கொண்டு எவ்வளவு இடங்கள் காலியாக உள்ளது என அறிய இங்கே கிளிக் செய்யவும்.
மேலும் படிக்க: மறக்குமா நெஞ்சம் இசை கான்சேர்ட் Refund-க்கு இதில் பதிவிடவும்! ஏ.ஆர் அறிவிப்பு!
எனவே, முதற்கட்ட விண்ணப்பத்தினை தவறவிட்டவர்கள். இம்முறை விண்ணப்பித்து பயனடைய மற்றும் ஓர் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே, தங்களுக்கு விருப்பமான கல்லூரியை தேர்ந்தெடுத்து, விருப்பமான பாடப்பரிவினையும் தேர்ந்தெடுக்க மற்றும் ஒர் வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே, மாணவர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி, தங்கள் சேர்க்கையினை பதிவு செய்யலாம்.
இந்த Spot Admission கிடைப்பெறும் பாடப்பிரிவுகள்:
B.A தமிழ் மற்றும் பிற மொழிகளில் பட்டப்படிப்பு
B.B.A பிஸ்னஸ் அட்மினிஸ்ட்ரேஷன் பட்டப்படிப்பு
B.com ஜென்ரல் பட்டப்படிப்பு
B.sc கணிதம் பட்டப்படிப்பு
B.com C.A கொமர்ஸ் மற்றும் கணினி பிரிவு பட்டப்படிப்பு
இவ்வாறு நாற்பதற்கு மேற்பட்ட பாடப்பிரிவுகளில் 50க்கும் மேற்பட்ட மாணக்கர் சேர்க்கைகான காலியிடங்கள் உள்ளன. எனவே, இந்த Spot Admission வாய்ப்பினை பயன்படுத்தி மாணவர்கள், தங்கள் கல்வித் தகுதியை மேம்படுத்த வாய்ப்பு.
மேலும் படிக்க:
புதிதாக மின் மோட்டர் பம்ப்செட் வாங்க யாரை அணுக வேண்டும்?
2ஆம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான பொதுத் தேர்வு அறிவிப்பு!
Share your comments