1. செய்திகள்

ஸ்டாலினின் சூப்பர் திட்டம்: நடந்த தவறு மீண்டும் தொடராது!

T. Vigneshwaran
T. Vigneshwaran
Mk Stalin Schemes

தமிழ்நாட்டில் அதிக கடனில் சிக்கித் தவிக்கும் துறையாக மின்சாரத் துறை இருக்கின்றது. ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை வட்டியாக மட்டுமே செலுத்தி வருகிறது இத்துறை.

மின்வெட்டு பிரச்சினையை சமாளிக்க மிக அதிக விலைக்கு தனியாரிடம் மின்சாரத்தை பெற்றதே இந்த கடனுக்கு காரணம். நாளுக்கு நாள் மின்சாரத் தேவை அதிகரித்தபடியே வருகிறது. ஒரு லட்சம் இணைப்புகள் வேண்டி விண்ணப்பங்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.

காற்றாலை, அனல் மின் நிலையம், அணு மின் நிலையம் என்று பல வழிகளில் மின்சாரம் உற்பத்தியாகிறது. உற்பத்தியை அதிகரிக்காமல் மக்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியாது. அந்த வகையில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு காற்றாலை மூலம் மின் உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டத்தை தயாரித்துள்ளது.

அந்த வகையில் இந்தியாவில் முதன்முறையாக தமிழ்நாட்டில் மிதக்கும் காற்றாலை அமைக்கப்படஉள்ளது. டென்மார்க் உதவியுடன் இந்த காற்றாலைகள் அமைக்கப்படஉள்ளன. மன்னார் வளைகுடா பகுதிகளிலும், அங்குள்ள தீவுகளிலும் முதற்கட்டமாக காற்றாலைகள் அமைக்கப்பட்டவுள்ளதாகவும், இதுதவிர தமிழ்நாட்டில் காற்று அதிகம் வீசக்கூடிய கடற்கரைகளை தேர்வு செய்து அங்கும் காற்றாலைகளை அமைக்க முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டென்மார்க் மின்சக்தி அமைச்சர் ஜானிக் ஜோர்சென்சன் தலைமையில் 50 பேர் கொண்ட குழு அண்மையில் தமிழ்நாடு வந்து அடைந்தது. செப்டம்பர் 8ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் முதல்வர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து பேசினர்.

தமிழ்நாட்டில் எந்த விதமான காற்றாலைகளை அமைப்பது, எவ்வாறு அதை செயல்படுத்துவது என்பது குறித்து கலந்தாலோசித்தனர். இந்த திட்டத்தில் ரூ.35 ஆயிரம் கோடி முதல் ரூ.70 ஆயிரம் கோடி வரை முதலீடு செய்யப்பட உள்ளதாகவும்,  கடலில் அமைக்கப்படும் காற்றாலைகள் மூலம் 4 முதல் 10 ஆயிரம் மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2011 தேர்தலில் திமுக தோல்வியடைந்ததற்கு மின் வெட்டுப் பிரச்சினை முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்தது. இம்முறை ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னரும்கூட மின் வெட்டு பிரச்சினை மெதுவாக தலை தூக்கியது. பராமரிப்பு பணிகள் பல மாதங்களாக மேற்கொள்ளப்படாததாலே மின் வெட்டு ஏற்பட காரணம் என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இருப்பினும் திமுக ஆட்சிக்கு வந்தால் மின் வெட்டு பிரச்சினையும் வருகிறது என்று விமர்சனங்கள் எழுகின்றன. ஆனால் அத்தகைய விமர்சனங்கள் இனி வரக்கூடாது. தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாற வேண்டும் என்ற காரணத்தால் முதலவர் ஸ்டாலின் எடுக்கும் முயற்சிகளில் இந்த மிதக்கும் காற்றாலை திட்டம்  முக்கியமானது என்கின்றனர்.

மேலும் படிக்க:

மாதம் தோறும் 1000 ரூ அறிவித்த முதல்வர் ஸ்டாலின்!

தங்கம் விலை: ஒரே நாளில் ரூ. 144 உயர்ந்த தங்கம் விலை!!

English Summary: Stalin's super plan: the mistake that happened will not happen again! Published on: 11 September 2021, 05:01 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.