கைவினைத் தொழிலுக்கு என்றே தங்கள் வாழ்வை அர்பணித்த கலைஞர்களுக்கு, அதிலும் குறிப்பாக 65 வயதுக்கும் மேற்பட்ட சிறந்த கைவினைக் கலைஞர்கலூக்குத் தமிழக அரசால் “வாழும் கைவினைப் பொக்கிஷம்” எனும் விருதும், தமிழ்நாட்டின் சிறப்பான கைவினைக் கலைஞர்களின் கைத்திறத் தொழிலின் பங்களிப்பு, அபிவிருத்தி மற்றும் படைப்பு ஆகியவைகளைக் கருத்தில் கொண்டு “பூம்புகார் மாநில விருது” எனும் விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி 2021-2022-ஆம் ஆண்டிற்கான வாழும் கைவினைப் பொக்கிஷம் எனும் விருதானது, பத்து கலைஞர்களுக்கும், பூம்புகார் மாநில விருது எனும் விருதானது, பத்து கலைஞர்களுக்கும் என மொத்தமாக இருபது விருதாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதுகளைத் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கிச் சிறப்பித்தார்.
வாழும் கைவினைப் பொக்கிஷம் விருது என்பது. ரூ. 1 லட்சம் பரிசுத் தொகை, 8 கிராம் தங்கம், தாமிரப்பத்திரம் மற்றும் தகுதிச் சான்றிதழ் ஆகியவைகளை உள்ளடக்கியது அதே போன்று, பூம்புகார் மாநில விருது என்பது ரூ. 50ன் ஆயிரம் பரிசுத் தொகை, 4 கிராம் தங்கம், தாமிரப்பத்திரம் மற்றும் தகுதிச் சான்றிதழ் ஆகியவைகளை உள்ளடக்கியது.
விருதாளர்களும் அவர்களின் பிரிவுகளும்:
வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதாளர்கள்
மாரிமுத்து - தஞ்சாவூர் கலைத்தட்டு, முத்துச்சிவம் - கோயில் நகைகள்
மாரியப்பன் - தஞ்சாவூர் ஓவியம், கமலம் - இயற்கை நார் பொருட்கள்
தங்க ராஜா - வீணை கைத்திறத் தொழில், வடிவேல் – கடல் சிற்பம்
விசுவநாதன் - பஞ்ச லோகச் சிற்பம், விஜய வேலு - சுடுகளிமண் பொம்மை
ராமலிங்கம் - காகிதக் கூழ் பொம்மை, பிரணவம் - ஸ்தபதி பஞ்சலோகச் சிற்பம்.
பூம்புகார் மாநில விருதாளர்கள்
கதிரவன் - மரச்சிற்பம், தென்னரசு – தஞ்சாவூர் ஓவியம்
சகாயராஜ் - மரச்சிற்பம், கோபு - பஞ்சலோகச் சிலை
யுவராஜ் - மரச்சிற்பம், ராதா - நெட்டி வேலை
நாகப்பன் - கற்சிற்பம், மகேஷ்வரி - காகிதப் பூ பொம்மைகள்
ராஜேந்திரன் - வீணை கைத்திறத் தொழில்
செல்லம்மை - இயற்கை நார் பொருட்கள்
இவ்விருது வழங்கும் விழா சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனத் தலைவர் தா. மோ. அன்பரசன், தலைமைச் செயலாளர் இறையன்பு, கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் சுகாரத்துறை முதன்மைச் செயலாளர் தர் மேந்திர பிரதாப் யாதவ் முதலானோர் பங்கேற்றனர்.
மேலும் படிக்க...
Share your comments