தமிழ் மறவன் பட்டாம் பூச்சியினை தமிழக அரசு சின்னமாக தேர்ந்தெடுத்து அரசாணையை வெளியிட்டது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் வசிக்கும் எண்ணற்ற பட்டாம் பூச்சிகளில் தமிழ் மறவன் ஒரு இனமாகும், இதற்கு போர் வீரன் என்ற மற்றொரு பொருள் உண்டு.
தமிழக அரசுக்கென்று பல்வேறு சின்னங்கள் உள்ளன. ஒவ்வொரு சின்னமும் தமிழனின் பண்பாடு, பாரம்பரியம் மற்றும் வாழ்வியலோடு தொடர்புடையது என்றால் அது மிகையாது. நமது அரசு முத்திரைகளில் இடம் பெற்றுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரம், பனைமரம், மரகதப்புறா, வரையாடு, செங்காந்தள் மலர், பலாப்பழம், பரதநாட்டியம், கபடி உள்ளிட்டவை தமிழக அரசின் சின்னங்களாக அறிவிக்க பட்டுள்ளன. அந்த வரிசையில் தமிழ் மறவன் பட்டாம் பூச்சி இடம் பெற்றுள்ளது.
தமிழ் மறவன்
மேற்கு தொடர்ச்சி மலையில் 30-க்கும் அதிகமான பட்டாம் பூச்சி இனங்கள் வசிக்கின்றன. இதில் ‘தமிழ் மறவன்’ என்ற பட்டாம் பூச்சி இனமும் ஒன்று. இந்த பட்டாம்பூச்சிகள் அடிப்படையில் கூட்டமாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயரும் தன்மை கொண்டவை. இந்த பட்டாம்பூச்சிகள் பெரும்பாலும் மஞ்சள் மற்றும் அடர்த்தியான பழுப்பு வண்ணங்களில் காணப்படும். இதன் அறிவியல் பெயர் சிர்ரோசோர்ரா தையஸ் ஆகும்.
வனத்துறை பரிந்துரை
முதன்மை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின பாதுகாவலற்களின் பரிந்துரைக்கு இணங்க ‘தமிழ் மறவன்’ பட்டாம்பூச்சியினை தமிழக அரசின் சின்னமாக அறிவித்து அரசாணையை வெளியிட்டது.
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments