1. செய்திகள்

MFOI VVIF கிஷான் பாரத் யாத்ரா- கிரிஷி ஜாக்ரனுடன் STIHL கைக்கோர்பு

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
MFOI VVIF Kisan Bharat Yatra

கிரிஷி ஜாக்ரன் முன்னெடுப்பில் இந்தியாவின் மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் மேற்கொள்ள உள்ள MFOI, VVIF கிசான் பாரத் யாத்ராவிற்கு முன்னணி வேளாண் தொடர்பான இயந்திர உற்பத்தி நிறுவனமான STIHL தனது ஆதரவினை வழங்கியுள்ளது.

வேளாண்துறை சார்ந்து கடந்த 26 ஆண்டுகளாக ஊடகவியல் துறையில் இயங்கி வரும் கிரிஷி ஜாக்ரான் மற்றும் அக்ரிகல்ச்சர் வேல்ர்ட் இணைந்து வேளாண் துறையில் அதிதீவிரமாக செயல்படுவதோடு நல்ல வருமானம் ஈட்டும் முன்னோடி விவசாயிகளை கௌரவிக்கும் நோக்கத்தோடு MFOI (millionaire farmer of India) விருது வழங்கும் நிகழ்வினை ஏற்பாடு செய்து இருந்தனர்.

MFOI 2024 நிகழ்வுக்கான முன்னோட்டம்:

இந்தியா முழுவதுமுள்ள விவசாயிகளை சிறப்பிக்கும் நிகழ்வாக சமீபத்தில் வெற்றிக்கரமாக நடைப்பெற்று முடிந்த, MFOI 2023 விருது நிகழ்வினைத் தொடர்ந்து, நடப்பாண்டிற்கான நிகழ்வுக்கு (MFOI Awards 2024) பரிந்துரை, மற்றும் விண்ணப்பங்கள் விவசாயிகளிடமிருந்து வரவேற்கப்படும் சூழ்நிலையில் MFOI சம்ரித் கிஷான் உட்சாவ் (samridh kisan uttsav) நிகழ்வு இந்தியாவின் பல பகுதிகளில் கிரிஷி ஜாக்ரன் சார்பில் நடைப்பெற்று வருகிறது.

அதேப்போல், MFOI 2023 விருது நிகழ்வின் ஒரு பகுதியாக, இந்தியா முழுவதும் பயணம் செய்து விவசாயிகளின் புகழை பரப்ப காத்திருக்கும் MFOI VVIF kisan bharat yatra- வாகனத்தையும், மத்திய சாலைகள் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி கடந்தாண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நடப்பு மார்ச் மாதம், கிரிஷி ஜாக்ரன் முன்னெடுப்பில் இந்தியாவின் மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் மேற்கொள்ள உள்ள MFOI, VVIF கிசான் பாரத் யாத்ராவிற்கு முன்னணி வேளாண் தொடர்பான இயந்திர உற்பத்தி நிறுவனமான STIHL தனது ஆதரவினை வழங்கியுள்ளது.

இந்த யாத்ராவில் ஏறத்தாழ 25 மாநிலங்கள், 4520 முக்கிய நிறுத்தங்களில் விவசாயிகளை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது.

STIHL நிறுவனம்:

STIHL நிறுவனமானது வீட்டுத் தோட்டங்கள், நிலப்பரப்பு பராமரிப்பு, விவசாயம், வனவியல் மற்றும் கட்டுமானப் பணிகள் ஆகியவற்றில் உள்ள சவால்களைச் சமாளிப்பதற்காக தொழில்நுட்ப கருவிகளை தயாரித்து வருகிறது. ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயிகளின் நன்மதிப்பை STIHL நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

MFOI 2024- 100 பிரிவுகளில் விருது:

MFOI 2023- நிகழ்வினைத் தொடர்ந்து, Millionaire Farmer of India Awards 2024- நிகழ்வுக்கு விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகிறது.

2024 ஆம் ஆண்டுக்கான நிகழ்வில் ஏறத்தாழ 100-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளதாகவும் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. MFOI விருதுகள் 2024- நிகழ்வானது, டிசம்பர் 1 முதல் டிசம்பர் 5, 2024 வரை நடைபெற உள்ளது.

Read more:

விவசாயி என்றால் ஆண்கள் மட்டும் தானா?– வேளாண் துறையில் பெண்களின் பங்கு குறித்து ஷைனி டொம்னிக் விளக்கம்

பிரச்சினைக்குரிய மண்ணில் உள்ள நிலைகள்- சரிசெய்வது எப்படி?

English Summary: STIHL Joins with KJ initiative MFOI VVIF Kisan Bharat Yatra in West and Central Regions Published on: 08 March 2024, 01:00 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.