பாரம்பரிய விவசாயம் செய்திட அரசு மானியம் வழங்கப்பட இருக்கிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாரம்பரிய விவசாய மேம்பாட்டு திட்டத்தில் மாவட்டத்தின் அனைத்து பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பயன்பெற வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: ஆழ்குழாய் கிணறு அமைக்க 100% மானியம்|ஆட்சியர் அறிவிப்பு|விவசாயிகளுக்கு அழைப்பு!
பாரம்பரிய விவசாய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அரசு மானியம் பெறுவது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்ப்பில் கீழ்வருவன தெரிவிக்கப்பட்டுள்ளன. நிலையான உற்பத்தி, உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பு, இயற்கைவளப் பாதுகாப்பு மற்றும் மண்வள ஆரோக்கியத்தினை உறுதி செய்வதற்கு என இந்திய அரசும், தமிழக அரசும் பாரம்பரிய விவசாய மேம்பாட்டுத் திட்டத்திற்கு என அதிக முக்கியத்துவம் வழங்கிச் செயல்படுத்தி வருகின்றது.
மேலும் படிக்க: கல்லீரல் பிரச்சனையா? விடுபட வேண்டுமா? எளிய வழிகள் இதோ!
தூத்துக்குடி மாவட்டத்தில் 2023-24ம் ஆண்டுக்கான பாரம்பரிய விவசாய மேம்பாட்டு திட்டத்தில் குழுவாக இருக்கும் விவசாயிகள் 300 ஹெக்டர் மற்றும் தனி விவசாயிகளுக்கு என 140 ஹெக்டர் ஆக மொத்தம் 440 ஹெக்டர் அளவில் ரூ.52.3 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்து செயல்படுத்தப்பட இருக்கிறது.
மேலும் படிக்க: விவசாயிகளுக்கு ரூ.2500 மானியம்|பாரம்பரிய சாகுபடிக்கு மானியம் அறிவிப்பு!
பாரம்பரிய விவசாய மேம்பாட்டுத் திட்டத்தில் குழுவாகச் சேர்ந்து பயன்பெறுவதற்கு ஒரு கிராமத்தினைச் சேர்ந்த அல்லது அருகிலுள்ள 2-3 கிராமத்தில் இருக்கும், குறைந்தது 20 விவசாயிகள் சேர்ந்து 20 ஹெக்டர் கொண்ட தொகுப்பினை உருவாக்கிப் பாரம்பரிய விவசாயத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்படவேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ஒரு ஹெக்டருக்கு முதலாம் ஆண்டு ரூ. 16500, இரண்டாம் ஆண்டு ரூ. 17000 மற்றும் மூன்றாம் ஆண்டு ரூ. 16500 என மொத்தம் ஒரு ஹெக்டருக்கு ரூ 50000 மானியம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: PM Kisan ரூ.2000! வெளியான புதிய அப்டேட்!
பாரம்பரிய விவசாய மேம்பாட்டு திட்டத்தில் மற்றுமொரு துணை திட்டமாக ஏற்கனவே பாரம்பரிய விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்ற தனி விவசாயிகள், குழுவாகச் சேர்ந்து பயன்பெற இயலாத விவசாயிகள், வேறு எந்த திட்டத்திலும் பயன்பெறாத பாரம்பரிய விவசாயிகளுக்கு பதிவு கட்டணமாகக் கீழ்வருவனக் கூறப்படுகின்றது. இந்த திட்டத்தில் ஒரு ஹெக்டருக்கு முதலாம் ஆண்டு ரூ. 2000, இரண்டாம் ஆண்டு ரூ. 2000 மற்றும் மூன்றாம் ஆண்டு ரூ. 2000 என்று மொத்தமாக ஓரு எக்டருக்கு ரூ 6000 மானியம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: புதிதாக வெளியாகும் கூட்டுறவு சங்கத்தின் கோ பஜார் செயலி!
பாரம்பரிய விவசாய மேம்பாட்டு திட்டத்தில் குழுவாக சேர்ந்து பயன்பெறும் விவசாயிகளுக்கு ஒரு எக்டருக்கு முதல் ஆண்டில் குழுவினை உருவாக்கிட ரூ. 1000, குழுவின் தகவல் சேகரித்துப் பராமரித்திட ரூ. 1500 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மண்டல ஆலோசனை மற்றும் பதிவு கட்டணமாக ரூ. 700, பாரம்பரிய விவசாயம் செய்திட ஊக்கத்தொகை ரூ. 12000 மற்றும் விளம்பரச் செலவினங்கள் ரூ. 1300 என மொத்தம் ஒரு ஹெக்டருக்கு முதலாம் ஆண்டு ரூ. 16500 மானியம் வழங்கப்படும். எனவே அனைத்து வட்டார விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்து அல்லது தங்கள் பகுதி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களைத் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்து இருக்கிறார்.
மேலும் படிக்க
சதம் அடித்த தக்காளி விலையில் மாற்றம், ரூ. 60க்கு விற்பனை!
காய்கறி பயிரிட மானியம்|புகையிலைக்கு மாற்றாக காய்கறி|ஏக்கருக்கு 8000 ரூபாய்!
Share your comments