கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது.மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.இதில் அரசும் சில இழப்பீடுகளை சந்தித்து வருகின்றது. ஊரடங்கால் வீடுகளில் எடுக்கப்படும் மின்கட்டண கணக்கெடுப்பு பணிகளும் சரியாக நடக்கவில்லை. மேலும் முந்தைய மாதக் கட்டணம் மற்றும் பயன்படுத்திய அளவை மின்வாரியத்திற்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பினால், கணக்கீடு செய்து பணம் கட்டலாம் என்று தெரிவிக்கப்பட்டது. பல வீடுகளுக்கு மின்கட்டணம் மூன்று மடங்கு அதிகமாக வந்துள்ளதாக புகார்களெழுந்துள்ளன. கூடுதல் கட்டணம் கணக்கீடு செய்யப்பட்டு வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பலருக்கும் இவ்வாறு கட்டணம் உயந்து வந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டு வேலை செய்து வரும் குடும்பத்திற்கு சாதாரணமாக ரூ. 170 மின் கட்டணம் வந்த நிலையில் தற்போது ரூ.830 ஆக வந்துள்ளது. இதுமட்டுமல்லாமல் நாம் கொரோனா காலத்தை கடந்து வந்துகொண்டிருக்கிறோம். பலரும் வேலையை இழந்து வறுமையில் வாடி வருகின்றனர். இச்சமயத்தில் கொரோனா காலத்தில் இந்த திடீர் கட்டண உயர்வு அதிர்ச்சி தருவதாக உள்ளதாகவும், பெரும் சுமையாக உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
அதனை சரி செய்ய மக்கள் மின்வாரிய அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு குறைகளை கூறுகிறார்கள். அப்போது அதிகாரிகள் அடுத்த கணக்கீட்டில் குறைத்துக் கொள்வோம் என்று பதிலளிப்பதாக தெரிவிக்கின்றன. இது நாடாகும் விஷயமா என்பது தெரியவில்லை. ஏனெனில் கடந்த ஆண்டும் இதே போல் பிரச்சனைகள் அதாவது கூடுதல் கட்டணம் வசூலித்தனர்.அடுத்த மாதம் திரும்ப கிடைக்கும் என்றனர். தற்போது வரை கிடைக்கவில்லை என்றும் பலர் கூறுகின்றனர்.
சிலருக்கு முன்பை விட குறைந்த கட்டணமே கணக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.அரசு உடனே கவனம் செலுத்தி கட்டண சுமையைக் குறைக்க வேண்டும் மற்றும் கூடுதலாக வசூலிக்கப்பட்டுள்ள கட்டணத்தை உடனே திரும்ப வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். தற்காலிகமாக வைப்புத் தொகை வசூலிப்பதை நிறுத்தி வைக்கவேண்டும் என்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொழில் நிறுவனங்களுக்கும் கூடுதல் கட்டணம் வந்துள்ளதாக தெரிவித்தனர். தொழிற்சாலைகள் அனைத்தும் மூடியுள்ள நிலையில் இந்த கட்டணம் எவ்வாறு சாத்தியமாகும் என்ற கேள்விகளும் எழுப்பியுள்ளனர். இதை தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்வால் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை இயக்க முடியாமல் பலரும் வாகனங்களை வீட்டில் நிறுத்தியுள்ளனர்.தற்போது மின் கட்டண உயர்வும் மேலும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க:
Share your comments