1. செய்திகள்

தமிழக அரசின் இலவச திட்டம்: மகிழ்ச்சியான செய்தி!

T. Vigneshwaran
T. Vigneshwaran

Tamil Nadu Bus

அரசு மாநகரப் பேருந்துகளில் இலவச பயணத்தின் மீது பெண்கள் ஆர்வம் காட்டியுள்ளனர், கடந்த 5 நாட்களில் மட்டும் 78 லட்சம் பெண்கள் பயணம் செய்துள்ளனர், மேலும் நிர்பயா திட்டத்தின் கீழ் பேருந்துகளில் பாதுகாப்பு வசதிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து பல வகையான மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக அரசு மாநகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற அறிவிப்பு பொதுமக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தினசரி எத்தனை பெண்கள் பயணிக்கிறார்கள் என்பதைக் கணக்கெடுப்பதற்கு கடந்த 12ஆம் தேதி முதல் பிரத்யேகமாக பயணச் சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. நாட்கள் செல்ல செல்ல இலவச திட்டத்தின் கீழ் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அதிகப்படியான பெண்கள் பயணம்

சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் கடந்த 12ஆம் தேதி முதல் தற்போது வரை அரசு மாநகரப் பேருந்துகளில் 78 லட்சம் பெண்கள் பயணம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 5,741 திருநங்கைகள், 51,615 மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள் 8,396 பேர் அடங்குவர்.

மீண்டும் தொடங்கிய பயணம்

இதுவரை பயணம் செய்தவர்களில் 56 சதவீதம் பேர் பெண்கள் மட்டுமே. தினசரி 28 லட்சம் பெண்கள் பேருந்துகளில் பயணம் செய்கிறார்கள். அதிலும் திருநெல்வேலி மாவட்டத்தில் 68 சதவீதம் பெண்களே தினசரி பேருந்துகளில் பயணம் செய்கிறார்கள். ஊரடங்கால் நிறுத்தப்பட்ட பேருந்துகள், மற்றும் கடந்த ஆட்சியில் பல்வேறு வழித்தடங்களில் நிறுத்தப்பட்ட பேருந்துகளையும் மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

நிர்பயா திட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் பழவேலி பகுதியில் நேற்று முதல் பேருந்து இயக்கப்படுகின்றன. இது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் போக்குவரத்துத் துறை பொது மக்களுக்கானது மட்டுமே. எரிபொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதற்காக பேருந்து டிக்கெட்களின் கட்டணத்தை அதிகரிக்க முடியாது.

அரசின் அனைத்து திட்டமும் மக்களின் நலன் கருதியே இருக்கும். நிர்பயா திட்டத்தின் மூலம் சென்னையில் 2,500 பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் அமைக்க திட்டம் தயாராக உள்ளது. இதற்காக 70 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதில் 41 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது. பள்ளி வாகனங்களை பொறுத்தவரை எஃப்.சி செய்து பாதுகாப்பாக வைத்திருக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:

கொரோனா 3வது அலை துவங்கிவிட்டதா? ICMR கருத்து என்ன?

மது பிரியர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி: விரைவில் அறிவிப்பு!!

விவசாயிகளுக்கான பிரதமரின் கிசான் திட்டத்தில் 5 முக்கிய மாற்றங்கள்!

English Summary: Tamil Nadu Government Free Program: Happy News!

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.