1. செய்திகள்

கோடை விடுமுறை நீட்டிப்பு - மாணவர்கள் சூப்பர் நியூஸ்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Summer Holiday Extension - Students Super News!

தமிழகத்தில் கோடை விடுமுறை நீட்டிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தத் தகவல் மாணவர்களைக் கூடுதல் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, மூடப்பட்டிருந்தப் பள்ளிகள் கடந்த ஆண்டு இறுதியில் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டன.
இருப்பினும் முந்தைய ஆண்டுகள் போல, பொதுத்தேர்வுகள் நடத்தப்பட மாட்டாது என மாணவர்கள் தரப்பில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திட்டமிட்டபடி பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

ஜூன் 20 வரை (Until June 20)

அதேநேரத்தில் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜூன் 20 ஆம் தேதி பள்ளிகள் திறக்க வாய்ப்பு உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து உள்ளார்.

ஜூன் 13 வரை (Until June 13th)

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழு ஆண்டு இறுதித் தேர்வு முடிந்து, கோடை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. வெப்ப அலை காரணமாக, இந்த ஆண்டு முன்கூட்டியே கோடை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. வரும் ஜூன் மாதம் 13 ஆம் தேதி அடுத்த கல்வி ஆண்டுக்காக பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும், பள்ளிக் கல்வித் துறை அறிவித்து இருந்தது.

அமைச்சர் தகவல்

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது கூறியதாவது:

தமிழகத்தில் அடுத்த ஆண்டுக்கான பள்ளி வகுப்புகள் ஜூன் மாதம் 20 ஆம் தேதி திறப்பதற்கான வாய்ப்பு உள்ளது.இது ஒரு வாரம் முன்னதாகவோ பின்னராகவோ இருக்கலாம். தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு தமிழக அரசு 38 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் தற்போது 10 ஆயிரத்து 300க்கு மேற்பட்ட பள்ளி கட்டடங்கள் கட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அடுத்த ஐந்து ஆண்டுகளில் கழிவறை உட்பட 18 ஆயிரம் கட்டடங்கள் கட்டப்படும். கொரோனா காலத்துக்கு பின்னர்
இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார். 

மேலும் படிக்க...

வருடத்திற்கு 3 சிலிண்டர்கள்- இனி இலவசமாகக் கிடைக்கும்!

குடிசை வீட்டிற்கு ரூ. 2.5 லட்சம் கரண்ட் பில் - அடக் கொடுமையே.!

 

English Summary: Summer Holiday Extension - Students Super News! Published on: 20 May 2022, 08:27 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.