1. செய்திகள்

வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் ‘சுகர் பீட்’ குறித்த தகவல்

KJ Staff
KJ Staff
Sugar Fit alternative for sugarcane

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நடை பெற்ற கருத்தரங்கில் ‘சுகர் பீட்’ எனப்படும் புதிய ரக கரும்பு பயிர் விரைவில் அறிமுக படுத்த உள்ளது. பெல்ஜியம் நிறுவனத்தின் ‘சுகர் பீட்’ என்ற புதிய ரக பயிர் தமிழகத்தில் உள்ள 6 ஆராய்ச்சி மையங்களில் பரிசோதனை செய்த பிறகு விவசாயிகளுக்கு பரிந்துரைக்கப்படும் என்று கோவையில் நடைபெற்ற கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரும்பிற்கு மாற்று பயிர் என்ற கருத்தரங்கில் ‘சுகர் பீட்’ என்ற புதிய ரக பயிர் குறித்து தெரிவிக்கப்பட்டன. பொதுவாக கரும்பு வளர்ச்சி அடைந்து பயன் தருவதற்கு பத்து மாதங்கள் ஆகும். அதே போன்று நீரும் அதிகளவு தேவைப்படுவதால் மாற்றுப்பயிர் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்படு வருவதாக வேளாண் ஆராய்ச்சி இயக்குனர் தெரிவித்தார். இந்த புதிய ரக ‘சுகர் பீட்’  நான்கரை மாதத்தில் விளையும் எனவும்,  தண்ணீரின் தேவை மூன்றில் ஒருபங்கு மட்டுமே என்று தெரிவித்தார். முதல் கட்டமாக சுகர் பிட் ஆராய்ச்சி, வேளாண் பல்கலைகழகம் கோயமுத்தூர், மதுரை, வைகை அணை, கடலூர், சிறுகமணி மற்றும் மேலாலத்துர் போன்ற இடங்களில் நடை பெற உள்ளது.

‘சுகர் பிட்’ சர்க்கரைக்கு மாற்றாகவும், உயிரி ஏரி பொருளாக பயன்படுத்தலாம் எனவும் தெரிவித்தனர். இந்த கருத்தரங்கில் பயிரிடும் முறை, சந்தைபடுத்துதல் பற்றியும் விவரிக்கப் பட்டன. மேலும் கரும்பு உற்பத்தியாளர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டன. மூங்கில் மற்றும் சோளத்தில் இருந்து சர்க்கரை எடுப்பதற்கான ஆரய்ச்சிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: Tamil Nadu Agricultural University (TNAU) has decided to undertake experimental trials on sugar beet

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.