தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. எதிர்க்கட்சிகள் அமளிக்கு இடையே பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உரை நிகழ்த்தினார்.
முக்கிய அம்சங்கள் (Key Features)
- குறுவை சாகுபடிக்காக டெல்டாவைச் சேர்ந்த 10 மாவட்டங்களில் 4,694 கிமீ கால்வாய்களை தூர் வார ஒப்புதல்; வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு
- நிலத்தடி நீர் செறிவூட்டும் கட்டமைப்புகளுக்காக ரூ. 2787 கோடியும், பொது விநியோகத்திட்டத்தை செயல்படுத்த முதற்கட்டமாக ரூ.7,500 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- பாசனத்திற்கான நீரை தங்குதடை இன்றி வழங்கவும், காவிரி பாசன அமைப்புகளை புனரமைத்தல் பணிகளுக்காகவும் ரூ.3,384 கோடி ஒதுகீடு.
- டெல்டா கடைமடை பகுதிகள் வரை தூர்வாரும் பணிகளுக்கு ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு
- வானிலையை கணிக்க புதிய தொழில்நுட்பங்கள் கொண்ட கட்டமைப்பை உருவாக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு
- அரசு நிலங்களை பாதுகாக்கவும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் சிறப்பு நிதியாக ரூ.50 கோடியும், வெள்ள தடுப்பு பணிகளுக்காக ரூ.500 கோடியும் ஒதுக்கீடு
- வானிலை ஆய்வு மையத்தை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்த ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு
- விழுப்புரம் மாவட்டம் ராமநாதபுரத்தில் புதிய அருங்காட்சியகம் அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு
- கொற்கையில் ஆழ்கடல் ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
- போதை பொருட்களை ஒழிக்க அரசு தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது; சமூக வலைத்தளங்களில் ஏற்படும் குற்றங்களை தடுக்க சமூக ஊடக சிறப்பு மையம் அமைக்கப்படும்.
- மருத்துவத்துறைக்கு ரூ.17901.23 கோடி ஒதுக்கீடு ஒதுக்கீடு.
- இலவச மிதிவண்டி திட்டத்திற்கு ரூ.162 கோடி ஒதுக்கீடு.
- மானிய விலையில் வீடு கட்டித்தரும் திட்டதிற்கு ரூ.4848 கோடி ஒதுக்கீடு.
- சட்டசபை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டங்களுக்கு ரூ.705 கோடி ஒதுக்கீடு.
- அம்ரூத் 2.0 திட்டத்திற்கு ரூ.2030 கோடி ஒதுக்கீடு.
- தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ரூ.2800 கோடி ஒதுக்கீடு.
- சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு.
- இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு.
- கால்நடை பராமரிப்புத்துறைக்கு ரூ.1315 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
- 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழம்பெரும் திருக்கோவில்களை புனரமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு.
- ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ.340.87 கோடி ஒதுக்கீடு.
- மின்கட்டன மானியமாக ரூ.9,379 கோடியை அரசு வழங்கும்.
- சிறு, குறு, தொழகில் நலத்துறையின் மூலதன முதலீட்டிற்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு.
- ஏற்றுமதியை மேம்படுத்த ரூ.100 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
- தமிழ் மொழி தொடர்பாக அகரமுதலி திட்டத்திற்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு
- தமிழ்நாடு ஒலிம்பிக் தங்கப் பதக்க தேடல் திட்டத்திற்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு; வடசென்னையின் ஆர்.கே.நகர் தொகுதியில் விளையாட்டு வளாகம் அமைக்கப்படும்.
மேலும் படிக்க
ஏற்றுமதி கடனுக்கு வட்டி சலுகை: அறிமுகம் ஆனது ஆன்லைன் பதிவு!
இயற்கை வேளாண்மை விளைபொருள் ஏற்றுமதியில் சிறந்த விவசாயிகளுக்கு பரிசு!
Share your comments