Tamil Nadu: Chance of rain for the upcoming 4 days!
சென்னை, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பது குறிப்பிடதக்கது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் அறிவித்திருப்பதாவது:-
வடதமிழக கடலோரம் மற்றும் உள் மாவட்டங்களின் மேல்நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளின் பல இடங்களில், இன்றும் (17-05-2022), நாளையும் (18-05-2022) இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று குறிப்பிடப்பட்டது.
கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல், தர்மபுரி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கரூர், திருச்சி, திருவண்ணாமலை, பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. 19, 20-ந்தேதிகளிலும் தமிழகம்-புதுச்சேரியில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
செய்தி: பேருந்து கட்டண உயர்வு குழப்பம்: போக்குவரத்து துறை அமைச்சர் விளக்கம்
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு அதாவது (இன்றும், நாளையும்)
வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று முதல் 19-ந்தேதி வரை லட்சத்தீவு, கர்நாடகா, கேரளா மற்றும் அதனையொட்டி தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் படிக்க: பிரதம மந்திரி வய வந்தனா திட்டம்: விண்ணப்பிப்பது எப்படி?
19, 20-ந்தேதிகளில் மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதி, தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தமிழக கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என்பதும் குறிப்பிடதக்கது. எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க:
மக்களை தேடி மருத்துவம்: கூடுதலாக 256 நடமாடும் மருத்துவ சேவை துவக்கம்
Share your comments