
சேலம் மாவட்டம் கருமந்துறையில், ரூ.100 கோடி மதிப்பீட்டில், கலப்பின பசு ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி மையம் அமைக்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். நாள்ஒன்றுக்கு 65லிட்டர் பால் கரக்கும் கலப்பின மாடுகள் உற்பத்தி செய்து, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
சேலம் அருகேயுள்ள தலைவாசலில் புதிய தாலுகா அலுவலக கல்வெட்டு மற்றும் வளாகத்தின் நடுவே கட்டப்பட்ட காளை மாடு சிலை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதல்வர் பழனிசாமி கல்வெட்டு மற்றும் சிலையை திறந்துவைத்தார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்க தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா அமைக்க, 1,022 கோடி ரூபாயில், கடந்தாண்டில் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆசியாவிலேயே மிக பெரியதாக சுமார், 1,102 ஏக்கர் பரப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.
சொல்வதைத்தான் செய்கிறேன்
தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசுகையில், நான் திட்டங்களுக்கு வெறும் அறிவிப்பை மட்டும் செய்வதாக கூறுகிறார். ஆனால், தலைவாசல் கால்நடை பூங்காவிற்கு தொடங்கப்படும் என ஒரு ஆண்டுக்கு முன் அறிவித்து தேவையான நிதி ஆதாரத்தையும் ஒதுக்கீடு செய்தேன்.இப்போது இந்த கால்நடை மருத்துவ கல்லூரியை நானே திறந்து வைத்து உள்ளேன். நான் சொல்வதைதான் செய்து உள்ளேன் என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு என்றார்.
கலப்பின பசு ஆராய்ச்சி நிலையம்
தலைவாசல் கால்நடை ஆராய்ச்சி பூங்காவிற்காக, 260 கோடி ரூபாயில் காவிரி குடி நீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நான், வெளிநாட்டிற்கு சென்றபோது, அங்கு நாள் ஒன்றுக்கு, 65 லிட்டர் பால் கொடுக்கும் பசுக்களை கண்டேன். அதுபோல் நம் மாநிலத்திலும் விவசாயிகளுக்கும் பசுக்களை உருவாக்க வேண்டும் என்று திட்ட மிட்டேன்.ஆராய்ச்சி நிலையம் மூலமாக அதிக பால் கொடுக்கும் கலப்பின பசுக்களை உருவாக்கினால் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும். அதற்காக கருமந்துறையில், 100 கோடியில் கலப்பின பசு ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி மையம் அமைக்கப்படும். விவசாயிகளுக்கு நன்மை கிடைத்திட தொடர்ந்து பாடுபடுவேன். இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் படிக்க...
நெல்லியில் ரூ.78 கோடியில் உணவுப் பூங்கா - அடிக்கல் நாட்டிய முதல்வர்!!
போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் தொடக்கம், பொதுமக்கள் பாதிப்பு!!
தொடரும் விவசாயிகள் போராட்டம், 40 லட்சம் டிராக்டர்களுடன் நாடாளுமன்றத்தை முற்றுகையிட விவசாயிகள் திட்டம்!!
பிஎம் கிசான் திட்டம் 2 ஆண்டுகள் நிறைவு! - விவசாயிகளின் உறுதிக்கு பிரதமர் மோடி பாராட்டு!
Share your comments