தமிழகம்: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புத்தாண்டு பரிசாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். ஆம், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, அவர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை ( DA) 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்த்தி அறிவித்தார்.
அகவிலைப்படி உயர்வு உடனடியாக அமலுக்கு வரும் எனவும், அவர் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார். அகவிலைப்படி உயர்வு காரணமாக, மாநிலத்திற்கு ஆண்டு அடிப்படையில் ரூ.2,359 கோடி கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என்று முதல்வர் கூறினார்.
"அதிகாரிகள் அதை (DA hike) புத்தாண்டு பரிசாகக் கருத வேண்டும் மற்றும் மக்கள் நலனுக்காக பாடுபட மாநில அரசுடன் ஒத்துழைக்க வேண்டும்"
என்று முதல்வர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று அகவிலைப்படி உயர்வு ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வரும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியம் பெறுவோர், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் என மொத்தம் 16 லட்சம் பேர் இந்த உயர்வால் பயனடைவார்கள்.
“மாநிலத்திற்கு ஆண்டு அடிப்படையில் ரூ.2,359 கோடி கூடுதல் செலவாகும். ஆனால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அதற்கான செலவை அரசே ஏற்கும்,''
என்றார்.
ஒரே பணியின் அடிப்படையில் ஒரே ஊதியம் கேட்டு போராட்டம் நடத்தும் ஆசிரியர்களுக்கு, நிதித் துறை செயலர் (expenditure) மற்றும் பள்ளிக் கல்வித் துறை செயலர், தொடக்கக் கல்வி இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்படும். முதல்வர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும் படிக்க: TNAU: பழங்கள் மற்றும் காய்கறிகளின் வணிகரீதியான உற்பத்தி குறித்து பயிற்சி
முதலைச்சருக்கு நன்றி
இந்த அறிவிப்பால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உட்பட அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதை தொடர்ந்து, டிசம்பர் 2, 2023 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரிகளை தலைமைச் செயலகத்தில், பல்வேறு தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் சந்தித்து, சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஒய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறும் வகையில் 4 சதவிகித அகவிலைப்படி உயர்த்தி வழங்கியமைக்காக நன்றி தெரிவித்து, புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர்.
மேலும் படிக்க:
2023 புகழ்பெற்ற கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம்| TNAU: வழங்கும் 2 நாள் பயிற்சி| IYOM 2023
Share your comments