1. செய்திகள்

ஒடிசா விவசாய அமைச்சருடன் தமிழக விவசாயிகள் சந்திப்பு!| தொழில் முனைவோர்களுக்கு விழிப்புணர்வு முகாம்

Yuvanesh Sathappan
Yuvanesh Sathappan
Tamil Nadu Farmers Meeting with Odisha Agriculture Minister!| Awareness camp for entrepreneurs

1,போக்குவரத்துக் கழகத்தை தனியார் மயமாக்கும் பேச்சுக்கே இடமில்லை- முதல்வர் திட்டவட்டம்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், எந்த சூழ்நிலையிலும் தனியார் மயமாக்கப்படாது என தெரிவித்துள்ள முதல்வருக்கு, போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் தொழிற்சங்கத்தினர் நன்றியை தெரிவித்துள்ளனர்.

2,கர்நாடக மாநிலத்தில் விவசாயிகளின் மகன்களுக்கு ரூ.2 லட்சம் – அதிரடி அறிவிப்பு!

விவசாயிகள் மகன்களை திருமணம் செய்யும் பெண்களுக்கு 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல், அவரது மகன்களைத் திருமணம் செய்துகொள்ளும் பெண்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக திருமணம் என்பது மணமக்கள், அவர்களது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கு மகிழ்ச்சியான வைபவமாக அமைவது வழக்கம். வாழ்நாளில் ஒருமுறை நடைபெறும் திருமணம், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தருணம். இந்த மகிழ்ச்சியில் பங்குகொள்ளும் விதமாகவும், விவசாயிகளின் குடும்பத்தினருக்கு வரும் பெண்களை ஊக்குவிக்கும் வகையிலும் புதிய அறிவிப்பை இந்த மாநில அரசு வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் பெயர் பஞ்சரத்னா ஆகும்.விவசாயிகளுக்காக பஞ்சரத்னா திட்டத்தில் சில திட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

3,ஒடிசா விவசாய அமைச்சருடன் தமிழக விவசாயிகள் சந்திப்பு!

ஒடிசா விவசாய அமைச்சர் ரணேந்திர பிரதாப் ஸ்வைன், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் அமைப்பு ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான குழுவை புவனேஷ்வரில் உள்ள க்ருஷி பவனில் சந்தித்தார். நாடு தழுவிய விவசாய சமூகத்தை பாதிக்கும் பிரச்சினைகள் குறித்து பிரதிநிதிகள் மற்றும் குழு உறுப்பினர்கள் பேசினர்.

2020ஆம் ஆண்டு விவசாயிகள் போராட்டத்தின் போது அளித்த வாக்குறுதிகளை பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துவதற்காக கன்னியாகுமரியில் இருந்து புது தில்லிக்கு இந்தக் குழு பயணிக்கிறது. மாநில அரசின் ஆதரவைக் கோரி ஸ்வீனுடன் விவசாயிகள் பிரச்சனைகள் குறித்து விரிவான விவாதம் நடத்தியது.

அனைத்து விவசாயப் பொருட்களுக்கும் லாபகரமான குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) உத்தரவாதப்படுத்தும் சட்டம், வணிக வங்கிகளில் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி, ஒப்பந்த விவசாயம் மற்றும் விவசாய சந்தைப்படுத்துதலில் இருந்து பெரிய நிறுவனங்களைத் தடுப்பது, விவசாயிகளுக்கு இயற்கை இடுபொருட்களை வழங்குதல் மற்றும் போராட்டத்திற்கு எதிரான வழக்குகளைத் திரும்பப் பெறுதல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

4,சென்னையில் தொழில் முனைவோர்களுக்கு விழிப்புணர்வு முகாம்

சென்னையிலுள்ள தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில் வரும் மார்ச் மாதம் 14 ஆம் தேதி தொழில் முனைவோர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெறுகிறது. முகாமானது காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணி வரை நடைபெறும் எனவும் சுயமாக தொழில் தொடங்க விரும்பும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் தொழிலை தேர்வு செய்வது எப்படி, தொழில் முனைவோருக்கு அரசின் சார்பில் வழங்கும் உதவிகள் குறித்து விவரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

5,H3N2 இன்புளூயன்சா பாதிப்பு இம்மாத இறுதிக்குள் குறையும் - மருத்துவர்கள் தகவல்

தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள H3N2 இன்புளூயன்சா பாதிப்பை தொடர்ந்து கண்காணிப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்.
இம்மாத இறுதிக்குள் இன்புளூயன்சாவின் தாக்கம் குறையும் என்றும் மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

மேலும் படிக்க

வேகமெடுக்கும் இன்புளூயன்சா காய்ச்சல்- தமிழகம் முழுவதும் 1000 சிறப்பு மருத்துவ முகாம்

டிஜிட்டல் இந்தியா மசோதா 2023-ன் சிறப்பம்சங்கள் என்ன? ஒன்றிய இணை அமைச்சர் விளக்கம்

English Summary: Tamil Nadu Farmers Meeting with Odisha Agriculture Minister!| Awareness camp for entrepreneurs Published on: 11 March 2023, 04:00 IST

Like this article?

Hey! I am Yuvanesh Sathappan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.