Tamil Nadu: For the next 5 days, where and when is the chance of rain?
தென் தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்களின் சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலில், தென்தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (ஏப்ரல் 19) இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகும் அறிவித்துள்ளது.
20.04.2022: தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கான வாய்ப்பு உள்ளது.
21.04.2022: தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
22.04.2022: தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளது.
23.04.2022: கன்னியாகுமாரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவித்திருக்கிறது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், எனவும் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என்றும் அறிவிப்பு வெளியீட்டுள்ளது.
மேலும் படிக்க:
Share your comments