கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் எதிரொலியால் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்துக் காணப்பட்டு வருகிறது. இன்று கணிசமாகவே தங்க விலை குறைந்திருக்கிறது, இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை நிலவரம் என்ன என்று அறிந்துக்கொள்ளுங்கள்.
ஒரு நாள் போல் ஒரு நாள் இருப்பதில்லை என்ற பழைய சொலவடையுள்ளது. அந்த வகையில், தங்க விலை ஒரு நாள் குறைந்தால், அடுத்து வரும் நாட்களில் மிகப் பெரிய அளவில் உயர்ந்துவிடுகிறது. இதனால் நகை வாங்கும் மக்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். ஆனால், இன்று (26 மே,2022) தங்கம் விலை குறைந்திருப்பது குறிப்பிடதக்கது. சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன என்று, இந்த பதிவில் பார்க்கலாம்.
சென்னையில் இன்று (மே 26, 2022) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.40 குறைந்து, ரூ. 4,765 ஆக விற்பனையாகிறது. அதே நேரம், 24 கேரட் ஒரு கிராம் தங்கம் ரூ. 5,164 ஆக உள்ளது. 8 கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கம் 320 ரூபாய் குறைந்து 38,120 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.
மேலும் படிக்க: தமிழ்நாடு CM பெல்லோஷிப் 2022-24: விண்ணப்பப் படிவம், தகுதி! அறிந்திடுங்கள்!
பிரதமர் மோடி வருகை முன்னிட்டு, சாலை பாதை மாற்றம் அறிவிப்பு!
தங்கம், மக்களின் இயல்பு வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிப்பதாகும். விவசாயிகளும் தங்கம் வைத்து கடன் பெறுவதை எளிதென நம்புகின்றனர். விவசாயிகள் மட்டுமின்றி சிறு தொழில் முதல் பெருந் தொழில் செய்வோர் வரை அனைவரும் தங்கத்தில் செய்யும் முதலீடு மற்றும் தங்கத்தின் மீது வாங்கும் கடன் அனைத்தையும் எளிது என நம்புகின்றனர். ஆகவே இதன் விற்பனை இன்றளவும் இன்றியமையாதது, என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
வீட்டிலிருந்த படி, தங்கம் விலை அறிய; (Find out the price of gold at home)
வீட்டிலிருந்தபடியே, தங்கத்தின் விலைகளை நீங்கள் எளிதாகக் கண்டறியலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, 8955664433 என்ற எண்ணில் மிஸ்டு கால் கொடுத்தால் போதும், உங்கள் தொலைபேசியில் ஒரு செய்தி வரும், அதில் சமீபத்திய கட்டணங்களை நீங்கள் பார்த்து பயனடையலாம்.
மேலும் படிக்க:
Share your comments