தமிழ்நாட்டில் வரும் 26-ம் தேதியை No Bag Day ஆக கடைபிடிக்கப்படும் என பள்ளிக்கல்வித்த்துறை அறிவித்துள்ளது. குழந்தைகளுக்கு புத்தகங்களின் பை ஒரு மிகப் பெரிய சுமையாக உள்ளது. இதை அவர்கள் சுமையாக பார்ப்பதைத் தவிற்த்திட, வரும் 26 ஆம் தேதி No Bag Day என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த 1 ஆம் தேதி பிப்ரவரி மாதம் தமிழகத்திலுள்ள பள்ளிகள் திறக்கப்பட்டது. நீண்ட நாட்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகப் பள்ளிக்கல்வித்துறை தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், மாடித்தோட்டம், மூலிகைத் தாவர வளர்ப்பு பாரம்பரியக் கலைகள் குறித்து வரும் 26 ஆம் தேதி பயிற்சி வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. எனவே அன்று புத்தகங்களுக்கு வேலையில்லை என்பது சிறப்பாகும். மேலும் இந்த பயிற்சியை முன்னிட்டு, இந்த நாளை No Bag Day என அறிவித்துள்ளது.
பள்ளிகளுக்கு புத்தகங்களை எடுத்து செல்வதை விடுத்து, வாழ்க்கைகான கல்வியை அனுபவங்கள் வாயிலாக மாணவர்கள் அறிய வேண்டும் என்பதே, இந்த அறிவிப்பு நோக்கமாகும்.
புத்தகங்களில் இல்லாத எத்தனையோ பாடங்கள் குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனுபவங்கள் மூலம் கற்கின்றனர். "கற்றது கையளவு கல்லாதது உலகளவு" என்பதுப்போல் அனுபவ பாடங்கள், மாணவர்களின் கல்விக்கு, இதுவும் ஒரு சிறந்த வழியாகும்.
இந்த வழியில் சுற்று சுழலை பாதுகாக்கும் வகையில், மாடித்தோட்டம், மூலிகைத் தாவர வளர்ப்பு, பாரம்பரியக் கலைகள் என பல்வேறு புதிய பிரிவுகளில், புதிதாக ஒன்றை கற்றுக்கொள்ள, இந்த ஏற்பாடு பயனுள்ளதாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
போதுவாகவே மாணவர்கள் அதித உற்சாகத்துடன் காணப்படுவது, ஆண்டு விழாக்களில் தான், அதுவும் விளையாட்டு ஆண்டு விழா, இன்னும் சிறப்பு. ஏனேன்றால், அன்று அவர்கள் புத்தகங்களை எடுத்து செல்வதில்லை. மேலும் பள்ளி நண்பர்களுடன் விளையாடும் மற்றும் ஆடல் பாடல் என கலைகட்டும் என்கிற சந்தோஷம். அவ்வாறு இருக்க, மாணவர்களுக்கு இந்த No Bag Day குட் நியூஸ் தான்.
மேலும் இது குறித்து, பள்ளிகளுக்கு புத்தகங்களை எடுத்து செல்வதை விடுத்து, வாழ்க்கைகான கல்வியை அனுபவங்கள் ரீதியாக, மாணவர்கள் அடைய No Bag Day என்ற புதிய திட்டம் வகுக்கப்பட்டதாக பள்ளிக்கல்வித்த்துறை தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க:
UPSC ஆட்சேர்ப்பு 2022: விண்ணப்பிக்க கடைசித் தேதி பிப்ரவரி 22
நாங்க ஆட்சிக்கு வந்த, "10 நாட்களில் விவசாய கடன் ரத்து"! சூடுபிடிக்கும் தேர்தல் களம்!
Share your comments