Tamil Nadu: Heavy rain for next 3 days in 5 districts!
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென் மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து, மழைக்கு பஞ்சமில்லை எனவே வரும் 3 நாட்களும் மழையின் அச்சம் உள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் அதாவது 7ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றஉம் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பில் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடு. அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி முதல் 28 டிகிரி செல்சியஸ் அளிவில் இருக்கக்கூடும்.
மேலும் படிக்க: வேளாண் செய்திகள்: 50% மானியத்தில் உளுந்து விதைகள் பெற அழைப்பு
வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், மத்திய வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்ககடல் பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:
KJ Choupal: திட்டக் கமிஷனின் முன்னாள் ஆலோசகர் டாக். சதாமேட் கிரிஷி ஜாக்ரனுக்கு வருகை
Share your comments