தமிழ்நாட்டின் ஏலகிரியில் தொன்றுத்தொட்டு விவசாயம் செய்து வரும் பழங்குடியின விவசாயிகள் எங்கள் பகுதியில் வேளாண் அலுவலகத்தை அமைத்துத் தருமாறு பலமுறை கோரிக்கை அளித்தும் உரிய பலனில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.
சிறு மற்றும் நடுத்தர வர்க்கப் பின்னணியில் இருந்து வந்த விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக அரசாங்கத்தின் மானியங்களை நம்பியிருக்கிறார்கள். அரசு மானியம், விதை, உரம் மற்றும் பிற வேளாண் பொருட்களை சேகரிக்க, 5,000க்கும் மேற்பட்ட பழங்குடியின விவசாயிகள், திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரியில் இருந்து, 20 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள ஜோலார்பேட்டைக்கு தான் தற்போது செல்ல வேண்டியுள்ளது. ஆதலால் ஏலகிரி பகுதியிலேயே வேளாண்மை அலுவலகத்தை அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர் அப்பகுதி விவசாயிகள்.
அழகிய மலைப்பிரதேசமான ஏலகிரியில் விவசாயம் முக்கிய பொருளாதார தொழிலாகும். இந்த நிலப்பரப்பில் பிப்ரவரி முதல் மே வரை கொய்யா, மாம்பழம், வாழைப்பழங்கள் மற்றும் பலாப்பழங்கள் போன்ற பல்வேறு வகையான பழங்களையும், ஆண்டு முழுவதும் பீன்ஸ், தக்காளி மற்றும் முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளும் விளைவிக்கப்படுகிறது. இருப்பினும், 14 குக்கிராமங்களில் பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்து வரும் பழங்குடியின விவசாயிகள், தங்கள் பகுதியில் உள்ள வேளாண்மை அலுவலகம் பல தசாப்தங்களுக்கு முன் மூடப்பட்டதால், தற்போது நெடுந்தூரம் பயணித்து ஜோலார்பேட்டைக்கு தங்களது விளைச்சலை எடுத்துச் செல்கின்றனர்.
சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள், அரசு வழங்கும் மானியத்தை நம்பி இருக்கின்றனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பழங்குடியின விவசாயி குப்புலிங்கம் கூறியதாவது: அரசு மானியம் பெற, ஏலகிரி மலையில் இருந்து ஜோலார்பேட்டைக்கு மாதம் ஐந்து முறையாவது பயணம் செய்ய வேண்டியுள்ளது. இதனால் தான் சம்பாதிக்கும் சிறிய தொகையில் இருந்து மாதம் 300 ரூபாய் செலவழிக்க வேண்டியுள்ளது என்றார்.
மேலும், விவசாயிகளும் தங்கள் விளைச்சலைக் கொண்டு செல்ல போக்குவரத்திற்காகவும் பெரும் செலவாகிறது. இதுகுறித்து ஏலகிரியைச் சேர்ந்த மற்றொரு பழங்குடியின விவசாயி ஜி.கே.ராமசாமி கூறுகையில், "ஒரு நாள் முழுவதும் அலுவலகத்திற்கு பயணம் செய்தேன். இதனால் சக்தியும் பணமும் வீணாகிறது.
"நான் பல தசாப்தங்களாக விவசாயத்தில் ஈடுபட்டுள்ளேன், ஆனால் இன்னும் பல விவசாயத் திட்டங்களைப் பற்றி எனக்கு தெரியாது. இங்கு ஒரு வேளாண் அலுவலகம் இருந்தால், நாங்கள் தொடர்ந்து அலுவலகம் சென்று அனைத்து அரசுத்திட்டங்களையும், வேளாண் தொடர்பான தகவல்களையும் தெரிந்துக் கொள்ள இயலும்," என்று விவசாயி மகாலிங்கம் கூறினார். ஏலகிரி மலை பழங்குடியினர் உழவர் கம்பெனி லிமிடெட் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதேவி கூறியதாவது: புதிய அலுவலகம் கோரி விவசாயிகள் பலமுறை மனு அளித்தும், அதிகாரிகளிடம் எந்த பதிலும் இல்லை என்றார்.
அதே நேரத்தில் பழங்குடியின விவசாயிகளின் அவலத்தை உணர்ந்த திருப்பத்தூர் வேளாண்மை அலுவலர் ராதா, இப்பிரச்னைக்கு தீர்வு காண கலெக்டரிடம் ஏற்கனவே கோரிக்கை விடுத்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் காண்க:
தேவையான சான்று விதைகளை விவசாயிகள் பெறலாம்- குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் அறிவிப்பு
STAR அந்தஸ்து பெற்ற முதல் விவசாய கல்லூரிக்கு பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கல் !
Share your comments