சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) முன்னிலையில் ஆட்டோமொபைல், காற்றாலை, எரிசக்தி, லாஜிஸ்டிகஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள முக்கிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
இதில், 17 ஆயிரத்து 141 கோடி ரூபாய் முதலீட்டில் 55 ஆயிரத்து 54 பேருக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும், 4 ஆயிரத்து 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 21 ஆயிரத்து 630 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையிலான 9 தொழில் திட்டங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து 7 ஆயிரத்து 117 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6 ஆயிரத்து 798 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையிலான 5 திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்படி, இன்று கையெழுத்தாகும் 49 திட்டங்களின் மூலம் 28 ஆயிரத்து 508 கோடி ரூபாய் முதலீட்டில் 83 ஆயிரத்து 482 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டது.
முதலீடு
அந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், “முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக தமிழ்நாடு நிச்சயம் மாறும். தெற்கு ஆசியாவில் சிறந்த மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதே தமிழக அரசின் இலக்கு. தொழிலை வர்த்தகமாக கருதாமல் சேவையாக எண்ணி தொழில் முதலீட்டாளர்கள் (Investors) செயல்படுகின்றனர். தொழில் புரிவது எளிதாகவும் அதன் உரிய சூழலை உருவாக்கவும் உறுதி பூண்டுள்ளேன். கொரோனா காலத்தை கொரோனாவை வென்ற காலமாக மாற்றியுள்ளோம். தமிழக அரசின் துரிதமான செயல்பாடுகளால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நிதி நெருக்கடியை தமிழக அரசு சமாளிக்க வேண்டியுள்ளது” என்றார்.
மேலும் படிக்க
கோழி குஞ்சு வடிவிலான தக்காளி! விற்பனைக்கு வந்ததால் ஆச்சரியம்!
இந்தியாவில் எக்ட்ரிக் பஸ்ஸை இயக்க சென்னை உள்பட 9 நகரங்கள் தேர்வு!
Share your comments