தில்லி தமிழ் சங்கத்தின் சார்பில் ஜூன் இறுதியில் நடக்கவுள்ள பிரமாண்ட விழாவில் பங்கேற்று, பிரதமர் மோடி சிறப்புரை நிகழ்த்த உள்ளார். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கேற்கும், இந்த நிகழ்வில், தமிழகத்துக்கான முக்கியமான அரசியல் செய்தியை பிரதமர் தெரிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தலைநகர் தில்லியில் உள்ள தமிழ் சங்கம், 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இதன் புதிய கட்டடம் தில்லி ராமகிருஷ்ணாபுரத்தில் கட்டப்பட்டுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் இங்கு வருவது வழக்கம் என்பது குறிப்பிடதக்கது.
இந்நிலையில் இம்மாத இறுதியில் தில்லி தமிழ் சங்கம் சார்பில் பிரமாண்ட விழா நடக்கவுள்ளது. இதில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விழாவின் ஒரு பகுதியாக இங்கு நிறுவப்பட்டுள்ள பாரதியார் சிலையையும் பிரதமர் திறந்து வைக்கவுள்ளார். இது குறித்து தில்லி அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது: சமீபத்தில் சென்னை நேரு விளையாட்டரங்கில் நடந்த அரசு விழாவில் பிரதமர் முன்னிலையில், தமிழக முதல்வர் பேசிய சில விஷயங்கள் குறித்து, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, தன் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.
தமிழகம்: தக்காளி விலை ரூ. 40க்கு விற்பனை!
இதையடுத்து, தில்லியில் உள்ள தமிழர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையிலும், தமிழக அரசியலில் பா.ஜ.,வின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் தெரியப்படுத்துவதற்காக, இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், முருகன் ஆகியோர் செய்து வருகின்றனர். பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகளும் தில்லி தமிழ் சங்கத்துக்கு வந்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து சென்றுள்ளனர்.
ABHA : மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட Health Card! எப்படி பெறுவது?
தில்லி தமிழ் சங்கத்தில் பிரமாண்ட பந்தல் அமைத்து இந்த விழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விழாவில் பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் கச்சேரியும் நடக்கவுள்ளது, இரட்டிப்பு சந்தோசம் என்பதில் மாற்றம் இல்லை. 200-க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர். எட்டு பாடல்களை இளையராஜா பாடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் தமிழகத்துக்கான முக்கிய அரசியல் செய்தியை பிரதமர் தெரிவிக்கவும் வாய்ப்புள்ளது, என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் படிக்க:
இன்ஸ்டாகிராமில் புதிய அப்டேட்: மகிழ்ச்சியில் பயனாளிகள்!
IRCTC: ரயில்வேயின் அதிர்ச்சி செய்தி! இனி லக்கேஜ் இலவசம் இல்லை!
Share your comments