தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டம் 2020-21-ஆம் ஆண்டுக்கான தொழில் முனைவோா் மேம்பாடு நாட்டுக்கோழி வளா்ப்புத் திட்டத்தின் கீழ் 50% மானியத்தில் ஆயிரம் கோழிக்குஞ்சுகள், கோழித் தீவனம் மற்றும் முட்டை அடைகாத்தல் கருவி வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள் வரேற்கப்படுவதாக திருப்பத்தூா் மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இது குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் விடுத்துள்ள அறிக்கையில் , தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டம் 2020-21-ஆம் ஆண்டுக்கான தொழில் முனைவோா் மேம்பாடு நாட்டுக்கோழி வளா்ப்புத் திட்டத்தின் கீழ் திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கு தலா 5 அலகுகள் வீதம் மொத்தம் 30 அலகுகள் குறியீடாக ஒதுக்கீடு செய்யப்பட்டு நடப்பு நிதியாண்டில் முதல் கட்டமாக 18 பயனாளிகளுக்குத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
50% மானியம்
தோ்ந்தெடுக்கப்படும் பயனாளிகளுக்கு 50 சதவீத மானியத்தில் ஆயிரம் கோழிக்குஞ்சுகள், கோழித் தீவனம் மற்றும் முட்டை அடைகாத்தல் கருவி வழங்கப்படும். எனவே, கால்நடை பராமரிப்புத் துறையின் கோழி வளா்ப்பு திட்டங்களில் கடந்த ஆண்டுகளில் பயனடையாத பெண்கள் சம்பந்தப்பட்ட கால்நடை உதவி மருத்துவரிடம் விண்ணப்பங்களை சமா்ப்பிக்க வேண்டும்.
இத்திட்டத்தில் விதவைகள், கணவரால் கைவிடப்பட்டவா்கள், மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவா் மற்றும் பட்டியல் இனத்தவருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
வேலூர் ஆட்சியர் அறிக்கை
வேலூர் மாவட்டத்தில் ஆட்சியர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கைகயில், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் 2020-21-ன் படி கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு தலா 5 அலகுகள் வீதம் மொத்தம் 35 அலகுகள் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில் முதற் கட்டமாக 17 பயனாளிகளுக்கு நாட்டுக் கோழி வளர்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதில் தேர்வாகும் பயனாளிகளுக்கு 50 சதவீதம் மானியத்தில் 1,000 கோழிக் குஞ்சுகள், கோழி தீவனம், முட்டை அடைகாத்தல் கருவி வழங்கப்படும். கால்நடை பராமரிப்புத் துறையின் கோழி வளர்ப்பு திட்டத்தில் கடந்த ஆண்டில் பயனடையாதவர்கள் நாட்டுக் கோழி வளர்ப்பு திட்டத்துக்காக அந்தந்த பகுதி கால்நடை உதவி மருத்துவரிடம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க...
PM Kisan FPO Yojana : விவசாய குழுக்களுக்கு 15 லட்சம் வரை கடனுதவி வழங்கும் திட்டம் குறித்து தெரியுமா உங்களுக்கு?
PM-KISAN Scheme: 7-வது தவணை விரைவில், ரூ.6,000 பெற யார் தகுதியற்றவர்கள்? விவரம் உள்ளே!!
வடகிழக்கு, இமாலய மாநிலங்களுக்கு காய்கறி,பழங்கள் அனுப்பினால் 50% மானியம்!!
Share your comments