1. செய்திகள்

நடப்பாண்டு 1,72,270 ஹெக்டர் சாகுபடி செய்ய இலக்கு- உரம் இருப்பு குறித்து ஆட்சியர் தகவல்

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Target to cultivate 1,72,270 hectares in Dharmapuri district this year

தருமபுரி மாவட்டத்தில் வேளாண்மை உழவர் நலத் துறையின் சார்பில் 2023-2024 ஆம் ஆண்டிற்கு சாகுபடி பரப்பாக 1,72,270 ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி இஆப., தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நேற்று (26.05.2023) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையேற்று, பேசும்போது தெரிவித்ததாவது :-

தருமபுரி மாவட்டத்தில் ஜனவரி முதல் மே-2023 திங்கள் வரையிலான காலத்திற்கான இயல்பான மழையளவு 156.9 மி.மீ ஆகும். தற்பொழுது வரை இந்த ஆண்டு 168.43 மி.மீ மழை பெய்துள்ளது. தருமபுரி மாவட்டத்தில் வேளாண்மை உழவர் நலத் துறையில் 2023-2024 ஆம் ஆண்டிற்கு 1,72,270 ஹெக்டேர் பரப்பளவில் நெல், சிறுதானியங்கள், பயிறு வகைகள் உள்ளிட்ட உணவு தானிய பயிர்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள், பருத்தி, கரும்பு சாகுபடி பரப்பாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வேளாண் பயிர்களின் உற்பத்தியை பெருக்கும் பொருட்டு இந்த 2023- 2024 ஆம் ஆண்டிற்கு 947.2 மெட்ரிக் டன் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருத்தி சான்று விதைகள் உள்ளிட்டவை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மே-2023 திங்கள் வரை 21.40 மெட்ரிக் டன் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள் எண்ணெய் வித்துக்கள், மற்றும் பருத்தி சான்று விதைகள் உள்ளிட்டவை விநியோகம் செய்யப்பட்டுள்ளது. நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், மற்றும் பருத்தி உள்ளிட்ட விதைகள் அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தேவையான விதைகளை பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம்.

தருமபுரி மாவட்டத்திற்கு வருடாந்திர உரத்தேவை 62484 மெட்ரிக் டன் என கணக்கிடப்பட்டுள்ளது. 14,461 மெட்ரிக் டன் யூரியா, டிஏபி, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ், எஸ்.எஸ்.பி உள்ளிட்ட உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

மேலும் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் பொருட்டு அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, ரைசோபியம் போன்ற உயிர் உரங்கள் 2023-2024 ஆம் ஆண்டிற்கு 30,000 எண்ணிக்கைகள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், மே-2023 திங்கள் வரை 713 எண்ணிக்கையிலான உயிர் உரங்கள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு உள்ளன. 22,450 எண்ணிக்கையிலான உயிர் உரங்கள் இருப்பில் உள்ளன. உயிர் உரங்கள் தேவையான அளவு இருப்பு உள்ளன. விவசாயிகள் தங்களுக்கு தேவையானவற்றை பெற்று பயன்படுத்திக்கொள்ளலாம்.

தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல்-2023 திங்களில் நெல் எண்ணெய் வித்துக்கள், கரும்பு, மரவள்ளி, மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்கள் பயிரிட்ட 2240 விவசாயிகளுக்கு ரூ.18.49 கோடி பயிர்கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும், வேளாண்மைத் துறை சார்ந்த அனைத்து திட்டங்களையும் விவசாயிகளுக்கு சரிவர எடுத்துச் சென்று அவர்களின் உற்பத்தியையும், வருமானத்தையும் அதிகரிக்கும் வகையில் வேளாண்மைத் துறையின் அனைத்து நிலை அலுவலர்களும் பணிப்புரிந்திட அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி இஆப., தெரிவித்துள்ளார்.

pic courtesy: unsplash

மேலும் காண்க:

3 ஆண்டுகளுக்கு இலவச பயிர் காப்பீடு- அரசு அதிரடி அறிவிப்பு

English Summary: Target to cultivate 1,72,270 hectares in Dharmapuri district this year Published on: 27 May 2023, 10:35 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.