டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் டிசிஎஸ் வேலைவாய்ப்பு முயற்சியின் கீழ் விண்ணப்பதாரர்களைப் பணியமர்த்துகிறது. எம்.எஸ்சி. பட்டம் பெற்றவர்கள் அல்லது M.A. பட்டம் பெற்றவர்கள் IT நிறுவனத்தால் பணியமர்த்தப்படுவார்கள்.
தேர்வு மற்றும் நேர்காணலுக்கான தேதிகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. எனினும், நிறுவனத்தின் வலைத்தளத்தின்படி, புதுமைக்கான ஆர்வத்துடன் குறிப்பிடத்தக்க திறமையாளர்களுக்கு மட்டுமே சாத்தியக்கூறுகளை வழங்குவதற்காக இந்த திட்டம் கட்டமைக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதிகள்: விண்ணப்பதாரர்கள் கணிதம், புள்ளியியல் அல்லது பொருளாதாரம் ஆகியவற்றில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். இருப்பினும், முழுநேர முதுகலை பட்டப்படிப்பு மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு மற்றும் முதுகலை தேர்வுகள் ஒவ்வொன்றிலும் குறைந்தபட்ச மொத்த மதிப்பெண் 60% அல்லது அதற்கும் மேல் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர் 18 முதல் 28 வயதுக்குள் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
பணி அனுபவம்: புதியவர்கள் மற்றும் இரண்டு ஆண்டுகள் வரை தொடர்புடைய பணி அனுபவம் உள்ளவர்களும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
குறிப்பு: இந்தியாவிற்கு வெளியில் இருந்து விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பதவிக்கு தகுதி பெற மாட்டார்கள்.
எப்படி விண்ணப்பிப்பது?: TCS இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்
- தளத்தை அடைந்ததும், பதிவு இணைப்பைக் கிளிக் செய்து, தேவையான தகவல்களை வழங்குவதன் மூலம் பதிவு செய்யுங்கள்.
- பதிவு செயல்முறையை முடித்த பிறகு, பதிவு செய்யப்பட்ட ஐடி (ID) மற்றும் கடவுச்சொல்லைப் (Password) பயன்படுத்தித் தளத்தில் உள்நுழையவும். விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்திச் செய்து பின் விண்ணப்ப எண்ணைக் குறித்துக் கொள்ள வேண்டும்.
தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வெழுதுவதற்குத் தகுதி பெற்றிருக்க வேண்டும். தகுதியான நபர்கள் தனிப்பட்ட நேர்காணலுக்குச் செல்ல வேண்டும். தேர்வு மற்றும் நேர்காணல் தேதிகள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க
அரசாங்க வேலைகளில் 26904 காலியிடங்கள்: 10வது 12வது தேர்ச்சி போதும்!
Share your comments