அகமதாபாத்தில் உள்ள சயின்ஸ் சிட்டியில் குஜராத் அரசுடன் இணைந்து இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை ஏற்பாடு செய்த மாநாட்டின் விவசாய அமர்வில் நிபுணர் குழு உறுப்பினர்கள் விவசாய வருமானத்தை மேம்படுத்துவதற்கான சவால்கள் மற்றும் அவற்றின் நம்பத்தகுந்த தீர்வுகள் குறித்து தங்கள் கருத்தினைத் தெரிவித்துள்ளனர். இது குறித்த விரிவான தகவலை இப்பதிவு விளக்குகிறது.
அகமதாபாத்தில் நடைபெற்ற மத்திய-மாநில அறிவியல் மாநாட்டில் விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்தக்கூடிய தயாரிப்பு மேம்பாடு, நிலைத்தன்மை மற்றும் ஏற்றுமதி நோக்குநிலை ஆகியவற்றை செயலாக்குவதற்கான கூட்டம் நடைபெற்றது.
விவசாயத்தில் அதன் வலிமைக்காக உலக அரங்கில் இந்தியா நல்ல ஒரு அடையாளமாக இருக்கின்றது. மேலும் இந்த நிலையைத் தொடர, உணவு மற்றும் தண்ணீரில் S&T தலையீடுகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று CSIR இன் டைரக்டர் ஜெனரல் என்.கலைசெல்வி அறிவுறித்தியுள்ளார்.
மேலும் படிக்க: பெண்களுக்கு ரூ. 6000 கிடைக்கும் மத்திய அரசின் திட்டம்: இன்றே அப்ளை பண்ணுங்க!
ICAR இன் டைரக்டர் ஜெனரல் ஹிமாஷு பதக், விவசாய அமைப்பிற்கான உற்பத்தி, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கான முழுமையான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என விவசாயிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
ICAR, தோட்டக்கலை மற்றும் பயிர் அறிவியல் துணை இயக்குநர் ஜெனரல் ஏ.கே. சிங், மகசூல் இடைவெளியைக் குறைப்பதற்கும், உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கும், ஆன்லைன் சந்தைகளை விரிவுபடுத்துவதற்கும், நடுத்தர மற்றும் அதிக அடர்த்தி கொண்ட தோட்டங்களுக்கு ICAR-FUSICONT தொழில்நுட்பத்தின் பயன்பாடு மிக அவசியமானதாக இருக்கின்றது எனக் குறிப்பிட்டுள்ளார்.
"உணவு தானிய உற்பத்தியில் கவனம் செலுத்தும் முதன்மை சவால்களுடன், மரபணு எடிட்டிங் போன்ற புதிய நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் பயிர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்க முடியும்" என்று குஜராத் வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆனந்த், கேபி கதிரியா சுட்டிக்காட்டிப் பேசியுள்ளார்.
மேலும் படிக்க
Share your comments