பறவைகள் பொதுவாக மரங்களில் தான் அதிகளவு கூடு கட்டும். அதிலும் சில பறவைகள் அதிபுத்திசாலிகள். பலமான காற்றடித்தாலும் கீழே விழாதபடி மரங்களில் சரியான இடத்தை தேர்வு செய்து கூடுகளை (Nests) கட்டும். ஆனால், நெற்கதிரில் ஒரு குருவி கூடு கட்டியிருப்பது ஆச்சரியத்தை அளித்துள்ளது. அதிலும், அந்தக் குருவிக் கூட்டை கலைக்காமல், அறுவடை (Harvest) செய்த விவசாயியின் செயல் போற்றுதலுக்குரியது. இந்த நிகழ்வு, தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர் (Thanjavur) மாவட்டத்தில் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நெற்கதிரில் குருவிக் கூடு:
தஞ்சாவூர் மாவட்டத்தில் அறுவடைக்குத் தயாரான நெற்கதிரில் இருந்த குருவி கூட்டைக் (Nest) கலைக்காமல், அறுவடை செய்த விவசாயியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உழைப்பின் மதிப்பை அறிந்தவன் விவசாயி, என்பதை மீண்டும் ஒருமுறை இந்த நிகழ்வு நமக்கு உணர்த்தியுள்ளது. கூடு கட்டுவதற்கு குருவி எடுத்த முயற்சி மற்றும் அதன் உழைப்பை வீணடிக்காமல், குருவிக் கூடு இருந்த நெற்கதிரை (Paddy) மட்டும் விட்டுவிட்டு, மற்ற நெற்கதிர்களை அறுவடை செய்துள்ளார் இந்த விவசாயி. நெற்கதிரில் கூடு கட்டிய குருவியின் செயலும், இயற்கையின் அதிசயங்களில் ஒன்று தான்.
கூட்டை கலைக்காத விவசாயி
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே, சாத்தனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன் (Ranganathan), வயது 40. இவர், 3 ஏக்கர் நிலத்தில், நெல் சாகுபடி (Paddy Cultivation) செய்திருந்தார். நேற்று முன்தினம் அறுவடை இயந்திரத்தை கொண்டு, நெல் அறுவடை செய்ய வயலுக்கு வந்தார். அப்போது, 3 அடி உயரத்தில் நெற்கதிர்களுக்கு இடையே குருவி ஒன்று கூடு (Nest) கட்டியிருந்தது. அதன் அருகில் சென்று பார்த்தபோது, கூட்டில் முட்டைகள் இருந்தன. இதையடுத்து, ரங்கநாதன் கூட்டை கலைக்காமல், அறுவடை செய்ய திட்டமிட்டார். பின், கூடு இருந்த இடத்தை மட்டும் விட்டு, மற்ற இடங்களில் அறுவடை செய்தார். குருவி கூடு இருந்த நெற்கதிர், கீழே சாய்ந்து விடாமல் இருக்க, இரண்டு கம்புகளை கொண்டு சேர்த்து கட்டியுள்ளார். விவசாயி ரங்கநாதனின் செயலை, பலரும் நெகிழ்ந்து பாராட்டினர்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக
இரயில்மறியல் போராட்டத்தையொட்டி தண்டவாளத்தில் குவிந்த விவசாயிகள்!
பசுக்களைப் பாதுகாக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பசு அறிவியல் தேர்வு!
Share your comments