வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் இதன் காரணமாகத் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தெற்கு ஆந்திரா மற்றும் தெற்கு கர்நாடகா பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகச் சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுவை, பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசான முதல் மிதமான மழையும்
தென்மேற்கு பருவக்காற்றின் மலைச்சரிவு மழைப்பொழிவு (orographic rainfall) காரணமாகக் கோவை, நீலகிரி மாவட்டங்களின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மற்றும் மிகக் கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை உருவாக வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை (Warning for fisherman)
-
இன்று மத்திய கிழக்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல், வடக்கு அந்தமான் பகுதிகளில் பலத்த சூறாவளிக் காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
-
இன்று மற்றும் நாளை ஆந்திரா கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 -50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்
-
நாளை முதல் வரும் 6-ம் தேதி வரை மத்திய மேற்கு மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்
-
இன்று முதல் வரும் 7-ம் தேதி வரை கடலோர கேரளா, கர்நாடகா லட்சத்தீவு மற்றும் தென் கிழக்கு, தென் மேற்கு, மத்திய கிழக்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்
-
இன்று மஹாராஷ்டிரா, கோவா கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்
இதனால் மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் யாரும் மீன் பிடிக்கச் செல்லவேண்டாம் என்று வானிலை மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் படிக்க...
மலர் சாகுபடி செய்ய விருப்பமா? பயிற்சி அளிக்கிறது வனவியல் கல்லூரி!
முள்ளங்கிக்கு விலை கிடைக்கவில்லை- சாலையில் கொட்டப்படும் அவலம்!
வேளாண் துறை சார்ந்த 112 தொழில் நிறுவனங்களுக்கு ரூ.11.85 கோடி நிதி உதவி!!
Share your comments